அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ள வேளையில் அதற்கு முன்னதாக இந்திய அணியானது தங்களது சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
அதிரடியாக நீக்கப்பட்ட 5 இந்திய வீரர்கள் :
அந்தவகையில் அடுத்ததாக நடைபெறவுள்ள இந்த இரண்டு தொடர்களும் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று பிசிசிஐ மூலம் அதிகாரிவபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கடைசியாக தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி விளையாடி இருந்தது. இந்நிலையில் அந்த தெ.ஆ டி20 தொடரில் விளையாடியிருந்த 5 வீரர்கள் அதிரடியாக இந்த இங்கிலாந்து தொடரில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மீண்டும் 5 வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய ரமன்தீப் சிங், ஜிதேஷ் சர்மா, ஆவேஷ் கான், யஷ் தயாள், விஜயகுமார் வைஷாக் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, துருவ் ஜுரேல், முகமது ஷமி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது அதிக அளவில் விவாதிக்கப்படும் விடயமாக மாறியுள்ளது. ஆனாலும் பிசிசிஐ தரப்பில் வெளியான தகவலின் படி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக முக்கிய வீரர்களான இவர்கள் ஐந்து பேரின் திறமையும் பரிசோதிக்க வேண்டியே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க இருந்து ரோஹித்தை தடுத்தது இவர்கள் தானாம் – கம்பீர் அதிருப்தி
மேலும் இனிவரும் ஒருநாள் தொடர்கள் மற்றும் டி20 தொடர்கள் என அடுத்தடுத்த தொடர்களில் வெவ்வேறு அணிகளே, வெவ்வேறு வடிவத்தில் விளையாடும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக எதிர்காலத்தில் இந்திய டி20 அணி தனி அணியாகவும், இந்திய ஒருநாள் அணி தனியாக விளையாடவும் அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



