30/3 என இந்தியா சரிந்த போது.. சென்னையில் இதை செஞ்சது ஸ்பெஷல்.. ரன்களை விட இதான் மகிழ்ச்சி.. ரிஷப் பண்ட்

Rishabh Pant
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சென்னையில் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 2 இன்னிங்சிலும் முறையே 376 மற்றும் 287-4 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக அஸ்வின் 113, ஜடேஜா 86, ஜெய்ஸ்வால் 56, ரிஷப் பண்ட் 109, சுப்மன் கில் 119* ரன்கள் குவித்தனர்.

அடுத்ததாக பேட்டிங் செய்த வங்கதேசம் 2 இன்னிங்சிலும் முறையே 149 மற்றும் 234 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. அதனால் வங்கதேசத்துக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (2) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மேலும் பாகிஸ்தானையும் போல வீழ்த்துவோம் என்று சவால் விடுத்த வங்கதேச அணிக்கு இந்தியா தக்க பதிலடியும் கொடுத்தது.

- Advertisement -

பிடித்த சென்னை:

முன்னதாக இந்தப் போட்டியில் ரிஷப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்த பின் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கினார். அந்த வாய்ப்பில் 2வது இன்னிங்ஸில் 109 ரன்கள் குவித்த அவர் அற்புதமான கம்பேக் கொடுத்துள்ளார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற தோனியின் சாதனையையும் அவர் சமன் செய்தார்.

இந்நிலையில் இந்திய அணிக்காக தமக்கு பிடித்த சென்னையில் சதமடித்து கம்பேக் கொடுத்தது ஸ்பெஷல் என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார். அத்துடன் 2வது இன்னிங்ஸில் 30-3 என இந்தியா தடுமாறிய போது சுப்மன் கில்லுடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்ததும் ஸ்பெஷல் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி ரிஷப் பண்ட் பேசியது பின்வருமாறு. “இந்த சதம் ஸ்பெஷல். ஏனெனில் நான் சென்னையில் விளையாடுவதை விரும்புகிறேன்”

- Advertisement -

ரிஷப் பண்ட் கம்பேக்:

“காயத்திற்கு பின் நான் 3 விதமான கிரிக்கெட்டிலும் விளையாட விரும்புகிறேன். இது டெஸ்ட் ஃபார்மட்டில் காயத்திலிருந்து வந்த பின் அடித்த முதல் சதமாகும். அதை உணர்வுபூர்வமாக கொண்டாடினேன். ஒவ்வொரு போட்டியிலும் இப்படி ரன்கள் குவிக்க விரும்புகிறேன். எனக்கு மிகவும் பிடித்த டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் வந்துள்ளது மகிழ்ச்சி. மீண்டும் மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்தது உணர்வுபூர்வமாக இருந்தது”

இதையும் படிங்க: இந்திய அணிக்கெதிராக நாங்க தோற்று இருந்தாலும் இந்த விஷயத்தை நினைச்சா பெருமையா இருக்கு – வங்கதேச கேப்டன் பேட்டி

“ஆனால் நாளின் இறுதியில் இந்தியாவுக்காக களத்தில் சாதாரண வீரராக விளையாடுவது மற்றதை விட சிறந்த உணர்வை கொடுக்கிறது. சூழ்நிலையை எனது வழியில் படிக்க முயற்சிக்கிறேன். இந்தியா 30-3 என இருந்த போது நீங்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும். அதைத்தான் சுப்மன் கில்லுடன் சேர்ந்து செய்தேன். களத்திற்கு வெளியே நல்ல உறவை கொண்டுள்ள ஒருவருடன் நீங்கள் களத்தில் பார்ட்னர்ஷிப் அமைப்பது ஸ்பெஷலானது” என்று கூறினார்.

Advertisement