இந்திய அணிக்கெதிராக நாங்க தோற்று இருந்தாலும் இந்த விஷயத்தை நினைச்சா பெருமையா இருக்கு – வங்கதேச கேப்டன் பேட்டி

Shanto
- Advertisement -

அண்மையில் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி அசத்தியது. அதன் காரணமாக இந்தியாவிற்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் வந்து இந்திய அணியை வீழ்த்தும் முனைப்புடன் காத்திருந்தது. ஆனால் முதல் போட்டியிலேயே வங்கதேச அணி இந்திய அணியிடம் 280 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் :

பலம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிராக பங்களாதேஷ் அணி சவாலான ஆட்டத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சென்னை மைதானத்தில் நடைபெற்ற இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே அவர்கள் பெரிய அளவில் ரன்களை குவிக்காமல் தோல்வியை சந்தித்துள்ளனர்.

- Advertisement -

குறிப்பாக இந்த போட்டியில் இந்திய அணியை சேர்ந்த மூன்று வீரர்கள் சதம் அடித்து அசத்திய வேளையில் வங்கதேச அணி சார்பாக ஒரே ஒரு அரைசதம் மட்டுமே பதிவாகி இருந்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஷாண்டோ கூறுகையில் :

இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும் வேகப்பந்து வீச்சாளர்களான ஹாசன், டஸ்கின் மற்றும் ராணா ஆகியோர் மிகச் சிறப்பாக பந்து வீசினர். இருந்தாலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்து இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தி விட்டனர். இந்த போட்டியில் உண்மையிலேயே எங்களது அணியின் வேகப்பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. அனைவருமே மிகச் சிறப்பாக பந்துவீசி இருந்தனர்.

- Advertisement -

குறிப்பாக புதிய பந்தில் மிகச் சிறப்பாக பந்துவீசி இருந்தனர். கடந்த இரண்டு தொடர்களாகவே எங்களது அணியின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. நான் ஒரு பேட்ஸ்மேனாக என்னால் முடிந்த வரை அனைத்து பங்களிப்பை வழங்க வேண்டும் என்று நினைத்து விளையாடி வருகிறேன். அந்த வகையில் இந்த போட்டியில் அரைசதம் கடந்ததில் மகிழ்ச்சி. எவ்வளவு தூரம் பேட்டிங் செய்ய முடியுமோ அவ்வளவு தூரம் பேட்டிங் செய்ய நினைத்தேன்.

இதையும் படிங்க : இனியும் அவரது இந்த வெறித்தனமான பேட்டிங் தொடரும் என்று நம்புகிறேன் – வெற்றிக்கு பிறகு ரோஹித் சர்மா கருத்து

இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும் இந்த போட்டியில் கிடைத்த அனுபவம் மூலம் நாங்கள் நிச்சயம் மிக சிறப்பாக மீண்டும் வருவோம். பந்துவீச்சாளர்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்துள்ள வேளையில் நிச்சயம் இனிவரும் போட்டிகளில் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்பிக்கை உள்ளதாக நஜ்முல் ஷாண்டோ கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement