இனியும் அவரது இந்த வெறித்தனமான பேட்டிங் தொடரும் என்று நம்புகிறேன் – வெற்றிக்கு பிறகு ரோஹித் சர்மா கருத்து

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கி போட்டியின் நான்காம் நாளான இன்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

வெற்றிக்கு காரணம் இவர்கள்தான் :

அதன்படி நடைபெற்ற முடிந்த இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணியானது 376 ரன்களை குவிக்க பங்களாதேஷ் அணி 149 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் 227 ரன்கள் என்கிற மிகப்பெரிய முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக 515 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 234 ரன்கள் மட்டுமே இதன் காரணமாக இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : உண்மையிலேயே இந்த வெற்றி மிக மகிழ்ச்சி அளிக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் நாங்கள் விளையாடிய இந்த போட்டியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இந்த போட்டியின் போது ரிஷப் பண்ட் இரண்டாவது இன்னிங்ஸில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அசத்தினார்.

- Advertisement -

கடினமான சூழ்நிலையில் இருந்து மீண்டு வந்த அவர் இப்படி ஒரு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி. டெஸ்ட் கிரிக்கெட்டை அவர் மிகவும் விரும்பி விளையாடுகிறார். இனியும் அவரது இந்த பேட்டிங் தொடரும் என்று நினைக்கிறேன். அதே போன்று துலீப் டிராபியில் விளையாடியதால் நமது அணியின் வீரர்கள் இந்தத் தொடரில் விளையாடுவது எளிதாக உள்ளது.

இதையும் படிங்க : சென்னையில் சரித்திரம்.. எதிரணி கேட்ட பின்பும்.. 92 வருடங்களில் இந்தியா 2 வரலாறு காணாத வெற்றி

இந்தியாவில் விளையாடினாலும் சரி, வெளிநாட்டில் விளையாடினாலும் சரி நமது அணியின் பந்துவீச்சு தற்போது மிகச் சிறப்பாக இருக்கிறது. அதன் காரணமாகவே வெற்றிகள் குவிந்து வருகின்றன. சென்னை மைதானத்தில் அஸ்வின் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலுமே அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டார் ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement