இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கைப்பற்றி அசத்தியது. அதற்கு அடுத்து அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போதைய மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக வீரர்களின் மெகா ஏலமானது இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.
சூரியகுமார் யாதவ் எங்கும் செல்லப்போவதில்லை :
இந்த மெகா ஏலத்தில் 10 அணிகளும் பங்கேற்று தேவையான வீரர்களை தேர்வு செய்ய இருக்கின்றனர். அதேபோன்று ஐபிஎல் நிர்வாகம் கொடுக்கும் விதிமுறைகளின் அடிப்படையில் எத்தனை வீரர்களை தக்க வைத்து எந்தெந்த வீரர்களை ஒவ்வொரு அணியும் விடுவிக்கப் போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்கனவே ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் அந்த அணி வீரர்களுக்குள் சரியான புரிதல் இல்லை என்றும் அதனால் மும்பை அணியிலிருந்து பல்வேறு வீரர்கள் வெளியேறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக சூரியகுமார் யாதவ் மும்பை அணியிலிருந்து கொல்கத்தா அணிக்கு செல்ல இருக்கிறார் என்றும் கூறப்பட்டது.
ஏனெனில் டிரேடிங் முறையில் கே.கே.ஆர் அணி சூரியகுமார் யாதவை வாங்கி அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயரை மும்பை அணிக்கு அனுப்பும் என்றும் அப்படி கொல்கத்தா அணிக்கு வரும் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் சார்பில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் வெளியான தகவலின் படி : சூரியகுமார் யாதவ் எந்த அணிக்கும் செல்ல போவதில்லை. அவரை நாங்கள் தக்க வைக்க இருக்கிறோம். இது எல்லாம் சமூக வலைதளத்தில் பரபரப்பை கிளப்புவதற்காகவே பரப்பப்பட்ட தவறான செய்திகள். சூரியகுமார் யாதவ் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தான் விளையாடுவார் என்று மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
இதையும் படிங்க : ஷர்துல் தாகூர் தப்பு செய்தாலும் தோனி எதுவும் சொல்லமாட்டார்.. அதுக்கு காரணம் இருக்கு – ஹர்பஜன் சிங் பேட்டி
இருப்பினும் நான்கு வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைக்கும் பட்சத்தில் ஹார்டிக் பாண்டியா, ரோகித் சர்மா, பும்ரா சூரியகுமார் யாதவ் ஆகியோர் தக்க வைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. ஆனாலும் சூரியகுமார் யாதவிற்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்றும் அப்படி ஒருவேளை அவருக்கு குறைவான சம்பளம் கொடுக்கப்பட்டால் அவர் அணியில் நீடிக்க விரும்புவாரா? மாட்டாரா? என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்றே கூறப்படுகிறது.



