சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி தலைமையில் சென்னை அணியானது ஐந்து முறை ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் கோப்பையை வென்றுள்ளது. இதற்கு காரணமே தோனியின் அற்புதமான கேப்டன்சி தான் என்று பலரும் அவரைப் பற்றி ஏற்கனவே புகழ்ந்து பேசி உள்ளனர். இந்நிலையில் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான தோனி ஷர்துல் தாகூரை எவ்வாறு கையாண்டார் என்பது குறித்து சென்னை அணியில் விளையாடிய முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
தோனியின் வெற்றிக்கு காரணம் :
2018 ஆம் ஆண்டிற்கு பிறகு சென்னை அணி அபரிவிதமான வளர்ச்சியை கண்டது. குறிப்பாக 2018, 2021, 2023 என அடுத்தடுத்த சீசன்களில் சென்னை அணி மூன்று முறை கோப்பையை வென்று அசத்தியிருந்தது. இருந்தாலும் அதற்கு அடுத்த சீசனில் ப்ளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறி இருந்தாலும் அடுத்த சீசனிலேயே பிரம்மாண்டமான கம்பேக்கை வழங்கியிருந்தது.
இப்படி ஒவ்வொரு முறை சென்னை அணி சரிவை சந்திக்கும் போதும் தோனியின் கேப்டன்சி மூலம் அந்த அணி மீண்டு வந்துள்ளது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. அதோடு தேவையே இல்லாத வீரர்கள் என்று ஒதுக்கப்படும் வீரர்களை எடுக்கும் தோனி அவர்களை பெரிய வீரராக மாற்றுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
அந்த வகையில் சென்னை அணியில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய ஷர்துல் தாகூரை எவ்வாறு தோனி கையாண்டார் என்பது குறித்து ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் சென்னை அணிக்காக மூன்று ஆண்டுகள் விளையாடினேன். அப்போது சரத்துல் தாக்கும் எங்களது அணியில் விளையாடி வந்தார். ஒரு போட்டியின் போது ஷர்துல் தாகூரின் பந்துவீச்சில் வில்லியம்சன் பவுண்டர்களாக விளாசிக் கொண்டு இருந்தார்.
அப்போது நான் நேரடியாக தோனியிடம் சென்று தாகூரின் லென்த்தை மாற்ற சொல்லுங்கள் இல்லை என்றால் அவரது ஓவரில் ரன்கள் கசிந்து கொண்டே தான் இருக்கும் என்று கூறினேன். அதற்கு தோனி என்னிடம் : அவனிடம் நான் எதுவும் சொல்ல மாட்டேன் நான் ஒரு முறை சொல்லிக் கொடுத்தால் அவன் தானாகவே அந்த தப்பை திருத்திக் கொள்ள மாட்டான். எனவே அவனாக புரிந்து கொண்டு வறை மாற்றும் வரை நான் அவரிடம் எதுவும் சொல்லப்போவதில்லை.
இதையும் படிங்க : விராட், ரோஹித் சொன்ன மாதிரி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஐசிசி இதை மாத்தணும்.. நேதன் லயன் கோரிக்கை
அவன் தொடர்ந்து பந்து வீசட்டும் என்று அவருக்கு ஆதரவளித்தாரே தவிர அவருடைய பந்துவீச்சில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை. இப்படி எந்த ஒரு வீரர் வீழ்ச்சியை சந்திக்கிறாரோ அவராக கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் என்று தோனி சிந்திக்க கூடியவர். அதேபோன்று ஒருவர் தவறு செய்தாலும் மற்ற வீரர்களை வைத்து எப்படி அந்த தவறை சரி செய்ய வேண்டும் என்று தோனிக்கு நன்றாக தெரியும். அதனாலே தோனி வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தார் என ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.



