விராட், ரோஹித் சொன்ன மாதிரி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஐசிசி இதை மாத்தணும்.. நேதன் லயன் கோரிக்கை

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 கோப்பையின் இறுதிப்போட்டி வரும் ஜூன் 11 – 15 தேதிகளில் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. அந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டனில் இருக்கும் லாஸ்ட் கிரிக்கெட் மைதானத்தில் இருக்கும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது. 2021, 2023 ஆகிய ஃபைனல்கள் முறையே இங்கிலாந்தின் சௌதம்டன் மற்றும் ஓவல் மைதானங்களில் நடைபெற்றது.

அதில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தோல்வியை சந்தித்தது. தற்போதைய நிலைமையில் மீண்டும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. அதனால் 2025 ஃபைனலில் மீண்டும் விளையாடி எப்படியாவது இந்தியா கோப்பையை வெல்லும் முனைப்புடன் தயாராகி வருகிறது. இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்த வேண்டும் என்று ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயன் கூறியுள்ளார்.

- Advertisement -

விராட் – ரோஹித் சொன்னது:

சொல்லப்போனால் இதே கருத்தை இந்தியாவின் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரும் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். குறிப்பாக ஃபைனலை 1க்கும் மேற்பட்ட போட்டிகள் கொண்ட தொடராக நடத்தும் போது முதல் போட்டியில் தோற்றாலும் அதிலிருந்து கம்பேக் கொடுத்து வெற்றி பெற வாய்ப்புள்ளது என 2021, 2023 தோல்விக்குப்பின் விராட் மற்றும் ரோஹித் சர்மா கூறியிருந்தனர். தற்போது அதே கருத்தை வலியுறுத்தும் நேதன் லயன் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் 3 போட்டிகள் கொண்ட தொடராக நடக்கும் ஒரு மாற்றத்தை நான் பார்க்க விரும்புகிறேன். அது கொஞ்சம் சிறப்பாக இருக்கும். ஏனெனில் ஒரு டெஸ்ட் போட்டியில் நீங்கள் தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே 3 போட்டிகள் கொண்ட தொடர் நடந்தால் டாமினேட் செய்யும் அணிகள் கம்பேக் கொடுத்து தங்களுடைய திறமையை காண்பிக்க வாய்ப்புள்ளது”

- Advertisement -

நேதன் லயனும் கோரிக்கை:

“அப்போட்டிக்காக தயாரவதற்கான நேரமும் நமக்கு சரியாக கிடைப்பதில்லை. எனவே அந்த ஒரு மாற்றத்தை நான் செய்ய விரும்புகிறேன். அந்த கோப்பை டெஸ்ட் கிரிக்கெட்டில் மகுடமாகும். 3 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறும் போது 2 – 0 என்ற கணக்கில் ஒரு அணி முன்னிலையில் இருந்தால் அது ஆர்வமாக இருக்காது என்று மக்கள் சொல்வார்கள்”

இதையும் படிங்க: பத்தலன்னு சொன்னாங்க.. அப்போ விராட் கோலி செஞ்சதை பாத்து ஆச்சர்யப்பட்டேன்.. கேமரூன் க்ரீன் வியப்பு

“இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இனிமேலும் ஆர்வமற்ற போட்டிகளுக்கு இடமில்லை. எடுத்துக்காட்டாக வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக காபாவில் நாங்கள் சந்தித்த தோல்வியை பாருங்கள். டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பது எனக்கு உலகக்கோப்பை போன்றது. அதற்காக அணிகள் 2 வருடங்களாக விளையாடி போராடி வரும் போது சுவாரசியம் இருக்கும்” என்று கூறினார்

Advertisement