ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரானது எதிர்வரும் நவம்பர் 22-ஆம் தேதி பெர்த் மைதானத்தில் துவங்குகிறது.
கடந்த 10 ஆண்டுகளாகவே இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் எந்த ஒரு டெஸ்ட் தொடரையும் இழக்காமல் வெற்றிகரமான அணியாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக 2014-15 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் டெஸ்ட் தொடரில் தோற்றதே இல்லை என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளது.
இந்த இடைப்பட்ட 10 ஆண்டுகளில் இரண்டு முறை ஆஸ்திரேலியா மண்ணிலும் இரண்டு முறை இந்திய மண்ணிலும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இருக்கிறது. இந்நிலையில் எதிர்வரும் இந்த பார்டர் கவாஸ்கர் தொடர் குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் :
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து நான் ஏறக்குறைய 18 மாதங்கள் தொடர்ச்சியாக ஓய்வின்றி பந்துவீசி வருகிறேன். எனவே தற்போது கிடைத்திருக்கும் ஓய்வு மீண்டும் நான் புத்துணர்ச்சியுடன் களத்திற்கு திரும்ப உதவும்.
அதேபோன்று இதுவரை நான் பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றதில்லை. நிச்சயம் இம்முறை அந்த குறையை பூர்த்தி செய்து இந்திய அணிக்கு எதிரான தொடரை கைப்பற்ற இருக்கிறோம் என்று பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார். மேலும் இம்முறை இந்திய அணிக்கு எதிராக பயன்படுத்த இருக்கும் திட்டங்கள் குறித்தும் பேசியிருந்தார்.
இதையும் படிங்க : ரோஹித் சர்மா டாஸ் மறக்கலாம்.. ஆனா முக்கியமான அதை மறக்க மாட்டாரு.. விக்ரம் ரத்தோர் பேட்டி
ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டனான பேட் கமின்ன்ஸ்க்கு டி20 உலக கோப்பை தொடர் முடிந்த கையோடு தற்போது 8 வாரம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் நேரடியாக பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடயிருப்பது குறிப்பிடத்தக்கது.



