ரோஹித் சர்மா டாஸ் மறக்கலாம்.. ஆனா முக்கியமான அதை மறக்க மாட்டாரு.. விக்ரம் ரத்தோர் பேட்டி

Vikram Rathour
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ரோஹித் சர்மா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தோல்விகளையும் உடைத்தது. அந்த வெற்றிக்கு அனைத்து வீரர்களையும் சிறப்பாக வழி நடத்திய கேப்டன் ரோஹித் சர்மா மிகவும் முக்கிய பங்காற்றினார்.

முன்னதாக ரோஹித் சர்மா அடிக்கடி தன்னுடைய மொபைல் ஃபோன், பணம் போன்றவற்றை மறந்து விடுவார் என்று 2017ஆம் ஆண்டு விராட் கோலி தெரிவித்திருந்தார். அதன் உச்சமாக கடந்த வருடம் ஒரு போட்டியில் டாஸ் வீசிய பின் என்ன செய்ய வேண்டும் என்பதையே ரோஹித் சர்மா மறந்து விட்டு திணறினார். குறிப்பாக நேரலையில் என்ன செய்ய வேண்டும் என்பதை மறந்த அவர் ஒரு நிமிடம் கழித்து தன்னுடைய முடிவை சொன்னது ரசிகர்களால் மறக்கவே முடியாது.

- Advertisement -

டாஸ் மறந்தாலும்:
இந்நிலையில் ரோகித் சர்மா அவ்வப்போது டாஸ் வீசினால் என்ன செய்ய வேண்டும் என்பதை மறந்து விடுவார் என முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். இருப்பினும் போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்ற திட்டத்தை ரோஹித் எப்போதும் மறக்க மாட்டார் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“டாஸ் வீசிய பின் பேட்டிங் அல்லது பவுலிங் செய்ய வேண்டுமா என்பதை வேண்டுமானால் ரோஹித் மறக்கலாம். அதே போல தன்னுடைய ஃபோன், ஐபேட் போன்றவற்றை அவர் பேருந்தில் மறந்து விடுவார். இருப்பினும் எப்போதும் அவர் தன்னுடைய போட்டித் திட்டத்தை மறக்க மாட்டார். அவர் மிகவும் திறமையானவர் மற்றும் புத்திசாலித்தனமான தந்திரோபாயவாதி”

- Advertisement -

“முதலில் ஒரு பேட்ஸ்மேனாக அவர் தரமான பிளேயர். அவர் தன்னுடைய ஆட்டத்தை புரிந்து தெளிவான திட்டத்துடன் விளையாடுவார். வீரர்களின் கேப்டனான அவர் வீரர்கள் மீது அதிக ஆதரவை முதலீடு செய்வார். அணி மீட்டிங்கில் அதிகமாக முதலீடு செய்யும் அவரைப் போன்ற கேப்டனை நான் பார்த்ததில்லை. அவர் அணிக்காக திட்டமிடுவதில் நீண்ட நேரம் செலவிடுவார்”

இதையும் படிங்க: அது கிடைக்கும் வர சைலன்ட்டா இருப்பாரு.. கெளதம் கம்பீர் உருக்கமாக இருப்பது பற்றி ரிங்கு சிங் பேட்டி

“பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுக்கு தனித்தனியே மீட்டிங்கை நடத்தகூடிய அவர் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பார். டி20 உலகக் கோப்பை ஃபைனலில் அவர் பும்ராவை முன்னதாகவே பயன்படுத்தினார். அதை சிலர் கேள்வி கேட்டிருப்பார்கள். ஆனால் ரோகித் அதை செய்ததாலேயே கடைசி ஓவரில் 16 ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய நிலை வந்தது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவர் செய்வதை புரிந்து கொள்ள நீண்ட நேரமாகும்” என்று கூறினார்.

Advertisement