ஏபி டீ வில்லியர்ஸ்க்கு சமமாக தென் ஆப்பிரிக்காவில்.. தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு கிடைத்த கெளரவம்

- Advertisement -

தமிழகத்தைச் சேர்ந்த மூத்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இந்த வருடத்துடன் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் 2018 நிதஹாஸ் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் 2022 ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடினார். அதனால் இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுத்து 2022 டி20 உலகக் கோப்பையில் விளையாடிய அவர் தற்போது வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அந்த சூழ்நிலையில் தெனாப்பிரிக்காவில் எஸ்ஏ20 டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அந்த தொடரின் 2025 சீசன் வரும் ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் எஸ்ஏ20 தொடருக்கான தூதராக இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் செயல்படுவார் என தென்னாப்பிரிக்க வாரியம் அறிவித்துள்ளது.

- Advertisement -

தென்னாப்பிரிக்காவில் கெளரவம்:
குறிப்பாக எஸ்ஏ20 தொடரை ரசிகர்களிடம் எடுத்துச் செல்வதற்கும் தரத்தை முன்னேற்றுவதற்கு உதவும் வகையில் தினேஷ் கார்த்திக் பிராண்ட் அம்பாஸ்டராக நியமிக்கப்பட்டுள்ளதாக தென்னாப்பிரிக்க வாரியம் தெரிவித்துள்ளது. சொல்லப்போனால் ஏற்கனவே எஸ்ஏ20 தொடரின் பிராண்ட் அம்பாஸ்டராக தென்னாபிரிக்க முன்னாள் ஜாம்பவான் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் செயல்பட்டு வருகிறார். தற்போது அவருக்கு சமமான கௌரவத்தை தினேஷ் கார்த்திக்கும் பெற்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து ஏபி டீ வில்லியர்ஸ் உடன் இணைந்து தினேஷ் கார்த்திக் அடுத்த வருடம் எஸ்ஏ20 தொடரில் பணியாற்ற உள்ளார். இது பற்றி தென்னாபிரிக்க வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு. “எஸ்ஏ20 தென்னாப்பிரிக்காவின் பிரீமியர் டி20 தொடர் தினேஷ் கார்த்திகை தங்களுடைய பிராண்ட் அம்பாஸ்டராக பெருமையுடன் வரவேற்கிறது”

- Advertisement -

“உலகக் கோப்பை வெற்றியாளராகவும் முன்னாள் இந்திய தேசிய அணியின் வீரராகவும் திகழும் தினேஷ் கார்த்திக்கின் பரந்த கிரிக்கெட் நிபுணத்துவம் இந்த லீக்கிற்கு ஒரு உற்சாகமான வளர்ச்சியாகும். இது உலகின் ஒரு உயர்ந்த டி20 லீக்’கை தொடர்ந்து முன்னேற உதவும். எஸ்ஏ20 தொடரின் பிராண்ட் அம்பாசிடர் ஏபி டீ வில்லியர்ஸ் மற்றும் அணி நிர்வாகங்களுடன் கார்த்திக் நெருக்கமாக இணைந்து வேலை செய்வார்”

இதையும் படிங்க: சுப்மன் கில்லை தடுக்க ஆளில்லை.. ஆனா ஜெய்ஸ்வால் கஷ்டம்.. போட்டிக்கு 2 பேர் இருக்காங்க.. ஸ்ரீதர் ஓப்பன்டாக்

“இத்தொடரின் பிரபலத்தை உலகம் முழுவதிலும் இந்தியா மற்றும் இங்கிலாந்தில் உள்ள ரசிகர்கள் மத்தியில் வலுவாக்க அவர் வேலை செய்வார்” என்று கூறியுள்ளது. அதே போல லீக் கமிஸ்னர் கிரேம் ஸ்மித் மற்றும் ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோருடன் இணைந்து எஸ்எஸ்20 தொடரை முன்னேற்றுவதற்கு ஆவலுடன் காத்திருப்பதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். மொத்தத்தில் தென்னாப்பிரிக்காவில் தமிழ்நாட்டு வீரரான தினேஷ் கார்த்திக்கிற்கு இந்த கெளரவம் கிடைத்துள்ளது தமிழக ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement