சுப்மன் கில்லை தடுக்க ஆளில்லை.. ஆனா ஜெய்ஸ்வால் கஷ்டம்.. போட்டிக்கு 2 பேர் இருக்காங்க.. ஸ்ரீதர் ஓப்பன்டாக்

- Advertisement -

மும்பையை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார். 2020 அண்டர்-19 உலகக் கோப்பையில் 400 ரன்கள் அடித்த இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக தேர்வானார். அந்த வாய்ப்பில் மிகச்சிறப்பாக விளையாடிய அவர் கடந்த வருடம் அதிவேகமாக அரை சதமடித்து 625 ரன்கள் குவித்தார்.

அதனால் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் முதல் போட்டியிலேயே சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்றார். அப்படியே 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேபாளுக்கு எதிரான காலிறுதியில் சதமடித்த ஜெய்ஸ்வால் இந்தியா தங்கப்பதக்கம் வெல்ல உதவினர். அதைத்தொடர்ந்து 2024 இங்கிலாந்து டெஸ்ட் டெஸ்ட் 712 ரன்களை அடித்து நொறுக்கிய அவர் 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா கோப்பையை வெல்ல உதவினார்.

- Advertisement -

ஜெய்ஸ்வாலுக்கு போட்டி:
அப்படி டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இதுவரை கிடைத்த வாய்ப்புகளில் அட்டகாசமாக விளையாடி வரும் அவருக்கு ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இருப்பதால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் வருங்காலத்தில் ஜெய்ஸ்வால் 3 வகையான இந்திய அணியின் துவக்க வீரராக இருப்பார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

இந்நிலையில் ஜெய்ஸ்வாலுக்கு இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா, தமிழக வீரர் சாய் சுதர்சன் போன்ற இடதுகை துவக்க வீரர்கள் போட்டியை கொடுப்பார்கள் என்று முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் கூறியுள்ளார். ஆனால் வருங்கால கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுப்மன் கில் வாய்ப்பை மற்ற எந்த வீரர்களாலும் தடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் ஸ்ரீதர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஜெய்ஸ்வாலுக்கு நிறைய போட்டி இருக்கிறது என்று நினைக்கிறேன். குறிப்பாக சாய் சுதர்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் அவருடைய கழுத்து வரைக்கும் போட்டியை கொடுக்கின்றனர். ஆனால் கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடினார். அத்தொடரில் அவர் சதமும் இரட்டை சதமும் அடித்ததை நாம் பார்த்தோம். எனவே அவரிடம் பெரிய இன்னிங்ஸ் விளையாடும் திறமை இருக்கிறது”

இதையும் படிங்க: ரோஹித்துக்கு பின் 2027 முதல் அவர் தான் இந்தியாவின் ஆல் ஃபார்மட் கேப்டன்.. ஸ்ரீதர் வெளிப்படையான பேட்டி

“அதே போல ஐபிஎல் தொடரிலும் சமீபத்திய ஜிம்பாப்வே டி20 தொடரிலும் அவர் அதிரடியாக விளையாடினார். ஆனாலும் அவருக்கு சாய் சுதர்சன், அபிஷேக் சர்மா போன்ற தரமான இடது கை பேட்ஸ்மேன்கள் சவாலை கொடுக்க சுற்றியிருக்கின்றனர். எனவே ஃபார்மை பொறுத்து அவர்கள் வாய்ப்பு பெறுவார்கள். ஆனால் தற்போது துணை கேப்டனாக இருக்கும் சுப்மன் கில் இந்தியாவின் முன்னணி வீரராக இருப்பார்” என்று கூறினார்.

Advertisement