ஐபிஎல் 2023 : அடுத்த சீசனிலாவது கோப்பையை வெல்லுமா பஞ்சாப் – தக்கவைக்க வேண்டிய வீரர்களின் பட்டியல்

pbks
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் முதல் முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்று களமிறங்கிய அணிகளில் பஞ்சாப் கிங்ஸ் ஒன்றாகும். கடந்த 2008இல் ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் நம்பிக்கை வைக்காமல் தோல்வியடைந்தால் உடனடியாக பதற்றமடையும் பஞ்சாப் அணி நிர்வாகம் விதவிதமான கேப்டன்களை மாற்றுவதும் தரமான வீரர்களை குறைந்த விலையில் வாங்குவதற்கு தவறுவதும் வழக்கமாக வைத்துள்ளது. அதற்கு பரிசாக ஒவ்வொரு வருடமும் தோல்விகளையும் சந்திக்கும் அந்த அணியை பொறுத்தவரை பிளே-ஆப் சுற்றுக்கு சென்றாலே அது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

MI vs PBKS

- Advertisement -

மேலும் டெல்லியை போல் பெயரையும் உடையும் மாற்றி பார்த்தும் எந்த பலனுமடையாத அந்த அணி ஐபிஎல் வரலாற்றில் தோல்வியை சந்திப்பதற்காக உருவாக்கப்பட்ட அணியாக வலம் வருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த வருடம் மயங்க் அகர்வால் தலைமையில் களமிறங்கினாலும் அதற்கேற்றார் போல் செயல்பட தவறிய அந்த அணி ஆரம்பம் முதலே சீரான வெற்றிகளை பதிவு செய்ய தடுமாறி கடைசியில் 6-வது இடத்தை மட்டுமே பிடித்தது.

அந்த அணிக்கு ஒருசில வீரர்களைத் தவிர பெரும்பாலான வீரர்கள் தொடர்ச்சியாக பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சிறப்பாக தவறியதே தோல்விக்கு காரணமாக அமைந்தது. எது எப்படி இருந்தாலும் இந்த வருடம் தோல்வியடைந்த அந்த அணி முதல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்தை அடுத்த வருடத்திற்கு தள்ளிப்போட்டுள்ளது. அதில் சாதிப்பதற்கு இம்முறை சிறப்பாக செயல்பட்டதால் தக்க வைக்க வேண்டிய வீரர்களை பற்றி பார்ப்போம்.

Liam Livingstone

1. லியாம் லிவிங்ஸ்டன்: இந்த வருடம் 11.50 கோடிக்கு அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரராக சாதனை படைத்த இவர் 14 போட்டிகளில் 4 அரை சதங்கள் உட்பட 437 ரன்களை 36.42 என்ற நல்ல சராசரியில் 182.08 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் மிரட்டலாக பேட்டிங் செய்தார்.

- Advertisement -

அதேபோல் பந்துவீச்சிலும் 12 இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய இவர் இந்த வருடம் பஞ்சாப் அணியின் சிறந்த வீரராக பாராட்டுகளை அள்ளினார். பிரம்மாண்ட சிக்சர்களை பறக்க விடும் திறமை பெற்ற இவரை அடுத்த வருடமும் பஞ்சாப் கண்டிப்பாக தக்க வைக்க வேண்டும்.

Agarwal

2. மயங் அகர்வால்: ரவீந்திர ஜடேஜா போல உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத இவரிடம் அந்த சுமையை தேவையின்றி பஞ்சாப் நிர்வாகம் கொடுத்தது என்றே கூறலாம். ஏனெனில் கடந்த சில வருடங்களாக 400க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த அவர் இந்த வருடம் லேசான காயத்துடன் 12 இன்னிங்சில் வெறும் 196 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

- Advertisement -

பொதுவாகவே கேப்டன்களை அடிக்கடி மாற்றும் பஞ்சாப் அடுத்த வருடம் வழக்கம் போல வேறு ஒரு புதிய கேப்டனை நியமித்து இவரை அந்த பொறுப்பிலிருந்து விடுவித்து சுதந்திரமாக விளையாட வைத்தால் இவர் சிறப்பாக பேட்டிங் செய்வார்.

Shikar Dhawan

3. ஷிகர் தவான்: கடந்த வருடங்களில் டெல்லியில் மிரட்டி வந்த இவர் இந்த வருடம் பஞ்சாப் அணிக்காக 8.25 கோடியில் 14 போட்டிகளில் 460 ரன்களை 38.33 என்ற நல்ல சராசரியில் எடுத்து சிறப்பாக செயல்பட்டார்.

- Advertisement -

37 வயதை தொட்ட இவரின் ஸ்ட்ரைக் ரேட் 122.67 என சற்று குறைவாக இருந்தாலும் தன்னிடமுள்ள அனுபவத்திற்கு அடுத்த வருடம் தக்க வைத்தால் நிச்சயமாக இவர் மீண்டும் சிறப்பாக செயல்படுவார்.

rabada 1

4. ககிஸோ ரபாடா: கடந்த வருடங்களில் சிறப்பாக செயல்பட்ட இவரை டெல்லி தக்கவைக்காமல் விட்டது ஆச்சரியம் என்ற நிலையில் 9.25 கோடிக்கு பஞ்சாப் இவரை வாங்கியது.

அதில் 14 போட்டிகளில் 23 விக்கெட்களை எடுத்தாலும் 9.60 என்ற சற்று அதிகப்படியான எக்கனாமியில் ரன்களை வழங்கினார். இருப்பினும் உலகத்தரம் வாய்ந்த இவரை அடுத்த வருடமும் தக்கவைத்தால் நிச்சயம் இன்னும் சிறப்பாக செயல்படுவார் என்று நம்பலாம்.

5. அர்ஷிதீப் சிங்: கடந்த சில வருடங்களாகவே பஞ்சாப் அணியில் விளையாடி வரும் இவரை இந்த வருடம் 4 கோடி என்ற நல்ல தொகைக்கு அந்த அணி நிர்வாகம் தக்க வைத்தது. அதில் 14 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை எடுத்தாலும் 7.70 என்ற சிறப்பான எக்கனாமியில் பந்துவீசி அனைவரின் பாராட்டுகளையும் அள்ளினார்.

மேலும் ரபாடாவை விட கடைசி கட்ட ஓவர்களில் துல்லியமாக பந்துவீசிய இவர் தற்போது இந்தியாவிற்காக விளையாடும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் அடுத்த வருடமும் சந்தேகமின்றி பஞ்சாப் தக்க வைக்க வேண்டும்.

Jitesh Sharma

6. ஜிதேஷ் சர்மா: தமிழக வீரர் ஷாருக்கான் சுமாராக செயல்பட்டதால் 12 போட்டிகளில் வாய்ப்பு பெற்ற இவர் கடைசி நேரத்தில் களமிறங்கி 10 இன்னிங்சில் 234 ரன்களை 163.64 என்று அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் குவித்து பஞ்சாப்பின் பினிஷராக முடிந்த அளவு சிறப்பாக செயல்பட்டார்.

வெறும் 20 லட்சத்துக்கு வாங்கப்பட்ட இவரை வீரேந்திர சேவாக் போன்ற முன்னாள் வீரர்கள் பாராட்டிய நிலையில் அடுத்த வருடமும் விக்கெட் கீப்பராக தாராளமாக வைக்கலாம்.

bhanuka Rajapaksa2

சந்தேக பட்டியல்:
1. பனுக்கா ராஜபக்சா: வெறும் 50 லட்சத்துக்கு விளையாடிய இலங்கையைச் சேர்ந்த இவர் 9 போட்டிகளில் 206 ரன்களை 159.69 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் 22.89 என்ற சுமாரான சராசரியில் எடுத்தார்.

இவருக்கு இது முதல் ஐபிஎல் தொடர் என்ற நிலையில் அடுத்த வருடம் தக்க வைத்தால் இன்னும் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது.

Rishi

2. ரிஷி தவான்: காயத்தால் விலகிய இவர் கடந்த 2016க்கு பின் இந்த வருட ஐபிஎல் தொடரில் ஸ்பெஷல் மாஸ்க் போட்டு கொண்டு பந்து வீசியது அனைவரையும் கவர்ந்த நிலையில் 6 போட்டிகளில் 6 விக்கெட்களை 8.21 என்ற ஓரளவு நல்ல எக்கனாமியில் எடுத்தார். 55 லட்சத்துக்கு விளையாடிய இவரையும் அடுத்த வருடம் 3-வது வேகப்பந்து வீச்சாளராக தக்க வைக்கலாம்.

3. ராகுல் சஹர்: 5.25 கோடிக்கு வாங்கப்பட்டு 13 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை 7.71 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்த இவர் முடிந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசினார். சுழல் பந்துவீச்சு துறையை பலப்படுத்த இளம் வீரராக இருக்கும் இவரையும் அடுத்த வருடம் பஞ்சாப் தக்க வைக்கலாம்.

Advertisement