ஐபிஎல் 2023 : மாஸ் கம்பேக் கொடுத்து 6வது கோப்பையை வெல்ல மும்பை தக்க வைக்க வேண்டிய வீரர்களின் பட்டியல்

MI Mumbai Indians
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சரித்திரம் படைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் 6-வது கோப்பையை வெல்லும் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 5 கோப்பைகளை வென்று கொடுத்த வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன் ரோகித் சர்மா வழி நடத்திய அந்த அணிக்கு சென்னை உட்பட இதர 9 அணிகளுக்கு கிடைக்காத சொந்த மண்ணில் விளையாடும் பொன்னான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மோசமான பேட்டிங் – பவுலிங் காரணமாக வரலாற்றிலேயே முதல் முறையாக முதல் 8 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்த முதல் அணியாக மோசமான சாதனை படைத்த அந்த அணி லீக் சுற்றுடன் முதல் அணியாக வெளியேறி அதிர்ச்சி கொடுத்தது.

Mumbai Indians MI

- Advertisement -

மேலும் பங்கேற்ற 14 போட்டிகளில் முதல் முறையாக 10 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து அவமானத்தைச் சந்தித்தது. மொத்தத்தில் வரலாற்றில் மோசமான வருடமாக அமைந்த இந்த தோல்விகளால் மிகப்பெரிய பாடங்களை கற்றுள்ள அந்த அணி அடுத்த வருடம் தரமான வீரர்களை தக்க வைத்து 6-வது கோப்பையை வென்று மாஸ் கம் பேக் கொடுக்க தயாராகியுள்ளது. அதற்காக ஐபிஎல் 2023 தொடருக்கு முன்பாக மும்பை தக்க வைக்க வேண்டிய வீரர்களைப் பற்றி பார்ப்போம்.

1. ரோஹித் சர்மா: கடந்த 2011இல் மும்பை அணிக்காக வாங்கப்பட்டு 2013இல் கேப்டனாக நியமிக்கப்பட்ட இவர் தனது அதிரடியான பேட்டிங் அற்புதமான கேப்டன்ஷிப் வாயிலாக 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். ஹிட்மேன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் அதன் காரணமாகவே இன்று 3 வகையான இந்திய அணிக்கு கேப்டனாகும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

Rohit Sharma vs KKR

இருப்பினும் இந்த வருடம் 16 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட இவர் பேட்டிங்கில் வரலாற்றில் முதல்முறையாக ஒரு அரைசதம் கூட அடிக்காமல் தடுமாறினாலும் 5 கோப்பைகளை வென்று கொடுத்து அதிகப்படியான கேப்டன்ஷிப் அனுபவம் கொண்டுள்ளதால் எவ்வித யோசனையுமின்றி மும்பை நிர்வாகம் முதல் ஆளாக தக்கவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

2. ஜஸ்பிரித் பும்ரா: கடந்த 2013 முதல் மும்பை அணிக்காக விளையாடி தனது துல்லியம் நிறைந்த அற்புதமான யார்க்கர் பந்துகளால் பேட்ஸ்மேன்களை திணறடித்து இன்று இந்தியாவின் 3 வகையான கிரிக்கெட்டிலும் முதன்மை பவுலராக விஸ்வரூபம் எடுத்துள்ள இவர் இந்த வருடம் 12 கோடிக்கு தக்க வைக்கப்பட்டார்.

Jasprith Bumrah vs KKR

இதர பவுலர்கள் ரன்களை வாரி வழங்கிய நிலையில் இவர் மட்டும் முதல் போட்டியை தவிர எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் அற்புதமாக பந்துவீசி தனித்துவமாக செயல்பட்டார். 14 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை 7.18 என்ற எக்கனாமியில் எடுத்த இவரையும் எந்தவித தயக்கமும் இல்லாமல் மும்பை தக்க வைக்க வேண்டும்.

- Advertisement -

3. சூரியகுமார் யாதவ்: கடந்த 2018 முதல் மும்பை பேட்டிங்கில் முக்கியவராக வலம் வரும் இவர் இந்த வருடம் ஆரம்பத்திலும் இறுதியிலும் காயத்தால் மொத்தம் 6 போட்டிகளில் பங்கேற்கவில்லை.

Suryakumar yadhav MI vs RCB.jpeg

இருப்பினும் 8 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட இவர் 8 போட்டிகளில் 303 ரன்களை 145.67 என்ற சூப்பரான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து சிறப்பாக செயல்பட்டார். சத்தமில்லாமல் இந்தியாவின் 360 டிகிரி பேட்ஸ்மேனாக செயல்படும் திறமை பெற்ற இவரையும் மும்பை தயக்கமில்லாமல் தக்க வைக்கலாம்.

- Advertisement -

4. கைரன் பொல்லார்ட்: யானைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழி வெஸ்ட் இண்டீசை சேர்ந்த இவருக்கு இந்த வருடம் கச்சிதமாக பொருந்தியுள்ளது என்றே கூறவேண்டும். ஏனெனில் பார்ப்பதற்கு முரட்டுத்தன மனிதராக காட்சியளிக்கும் இவர் கடந்த 2010 முதல் கடைசி நேரத்தில் களமிறங்கி மும்பை தோற்க இருந்த எத்தனையோ போட்டிகளில் சரவெடியாக பேட்டிங் செய்து பெற்றுக்கொடுத்த பல வெற்றிகளை மறக்க முடியாது.

Pollard Krunal Pandya

சொல்லப்போனால் மும்பை 5 கோப்பைகளை வென்றதில் ஒரு ஆல்-ரவுண்டராக இவரின் பங்கு அளப்பரியது. அதனால் 6 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட இவர் இந்த வருடம் மோசமாக செயல்பட்டதால் கடைசி 3 போட்டிகளில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

ஆனாலும் இவர் மீது கேப்டன் ரோகித் சர்மா மற்றும் மும்பை நிர்வாகம் நிறைய நம்பிக்கை வைத்துள்ளதால் அடுத்த வருடம் தக்க வைத்து மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் துண்டு ஒரு தடவைதான் தவறும் என்பதுபோல் நிச்சயம் பார்முக்கு திரும்பி அதிரடி காட்டுவார் என்று உறுதியாக நம்பலாம்.

MI vs KKR Murugan Ashwin

5. முருகன் அஷ்வின்: தமிழகத்தைச் சேர்ந்த இவர் இந்த வருடம் மும்பைக்காக களமிறங்கிய 8 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை 7.86 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து அசத்தினார். இவரைத் தவிர வேறு நல்ல சுழல்பந்து வீச்சாளர் தற்போது இல்லாத நிலைமையில் இவரை மும்பை தக்க வைப்பதே சிறந்த திட்டமாக இருக்கும்.

சந்தேக பட்டியல்:
1. இஷான் கிசான்: 15.25 கோடி என்ற அதிகப்படியான விலை தொகை சிறப்பாக செயல்படடே தீரவேண்டும் என்ற அழுத்தத்தை கொடுத்து இந்த வருடம் இவரை சுமாராக செயல்பட வைத்தது.

MI vs RR Ishan Kishan

இருப்பினும் 14 போட்டிகளில் 3 அரை சதங்கள் உட்பட 418 ரன்கள் எடுத்த இவரை அடுத்த வருடம் சற்று குறைவான விலையில் தக்கவைத்து வாய்ப்பளித்தால் சுதந்திரமாக சிறப்பாக பேட்டிங் செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது.

2. டேனியல் சாம்ஸ்: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பந்துவீச்சு ஆல்ரவுண்டரான இவர் ஆரம்ப கட்ட போட்டிகளில் ரன்களை வாரி வழங்கி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். குறிப்பாக கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பட் கமின்ஸ்க்கு எதிராக ஒரே ஓவரில் 35 ரன்களை கொடுத்த இவர் வெற்றியையும் பரிசளித்தார். அதனால் இடையில் பெஞ்சில் அமர வைக்கப்பட்ட இவருக்கு அளிக்கப்பட்ட 2-வது வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்தி மிகச் சிறப்பாக பந்துவீசினார்.

இதையும் படிங்க : நாங்க இதை பண்ணுவோம்னு யாரும் நம்பி இருக்க மாட்டாங்க. ஆனா சாதிச்சிட்டோம் – சுப்மன் கில் மகிழ்ச்சி

குறிப்பாக சாம்பியன் பட்டம் வென்ற குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட போது 2 ரன் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் எடுத்து சிறப்பாக பந்து வீசினார். எனவே ஆரம்பத்தில் சறுக்குவது அனைவருக்கும் சகஜம் என்ற நிலையில் இவரை தக்கவைத்து மீண்டும் வாய்ப்பு அளித்தால் நிச்சயம் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட அதிக வாய்ப்புள்ளது.

Advertisement