நாங்க இதை பண்ணுவோம்னு யாரும் நம்பி இருக்க மாட்டாங்க. ஆனா சாதிச்சிட்டோம் – சுப்மன் கில் மகிழ்ச்சி

Gill
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 26 ஆம் தேதி துவங்கிய பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது மே மாதம் 29 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே 8 அணிகளுடன் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் இந்த சீசனில் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்டு புதிய இரண்டு அணிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே மொத்தம் 10 அணிகளுடன் இந்த சீசனானது நடைபெற்றது. இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னர் அனைத்து அணிகளிலும் உள்ள வீரர்கள் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடத்தப்பட்டது. எனவே ஒவ்வொரு அணியிலும் பல்வேறு மாற்றங்கள் இருந்தன. இதன் காரணமாக இந்த ஐபிஎல் தொடரை கைப்பற்றப்போகும் அணி எது என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் அறிமுக அணியாக விளையாடிய குஜராத் அணியானது ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. பெரிய நட்சத்திர வீரர்களை வைத்திருக்காமல் இருந்தாலும் இளம் வீரர்களை சரியாக பயன்படுத்தி அவர்களிடம் இருந்து பெஸ்ட்டை வெளிக்கொணர்ந்த ஹர்டிக் பாண்டியா மிகச்சிறப்பாக அணியை தலைமை தாங்கி சாம்பியன் பட்டம் வெல்லும் அளவிற்கு அற்புதமாக வழிநடத்தியுள்ளார்.

- Advertisement -

இதன் காரணமாக குஜராத் அணி வீரர்களுக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் குஜராத் அணி விளையாடத் துவங்கும் போது பிறரின் பார்வை என்னவாக இருந்தது என்பது குறித்து குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த சீசன் எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று.

Shubamn Gill

ஏனெனில் இந்த சீசனில் ஏற்றம் இறக்கம் என இரண்டையுமே நான் சந்தித்துள்ளேன். அதுமட்டுமின்றி இந்த சீசன் எனக்கு ஒரு மறக்க முடியாத சீசனாக அமைந்துள்ளது. துவக்கத்தில் நாங்கள் டாப் 4 அணிகளில் ஒன்றில் கூட வரமாட்டோம் என்று பலரும் நினைத்திருப்பார்கள். மேலும் குஜராத் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறாது என்றும் பலர் கூறியது எனது கவனத்திற்கு வந்தது. ஆனால் நான் அதனை பொருட்படுத்தவில்லை.

- Advertisement -

எங்கள் அணி தற்போது சாம்பியன் பட்டத்தை வென்று இந்த தொடரை நிறைவு செய்துள்ளது மிகவும் மகிழ்ச்சி. இந்த தொடரில் இருந்து நான் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டேன். எதிர்வரும் தொடர்களிலும் சில தவறுகளை திருத்திக் கொண்டு இன்னும் பலமான அணியாக குஜராத் அணி மாற உதவிபுரிவேன் என்றும் நிச்சயம் எங்களது அணி இன்னும் பிரகாசமான அணியாக வெற்றிப் பாதையில் செல்லும் என சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 : படுதோல்வியை சரிசெய்ய மும்பை நீக்க வேண்டிய 6 வீரர்களின் – லிஸ்ட் இதோ

நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடிய இவர் 16 போட்டிகளில் விளையாடி 483 ரன்களை குவித்துள்ளார். இதில் நான்கு அரை சதங்களும் அடங்கும். இந்த ஆண்டு குஜராத் அணி அறிவிக்கப்பட்டபோது அவரை மெகா ஏலத்திற்கு முன்பாகவே 8 கோடி ரூபாய் கொடுத்து அவர்கள் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement