ஐபிஎல் 2023 : படுதோல்வியை சரிசெய்ய மும்பை நீக்க வேண்டிய 6 வீரர்களின் – லிஸ்ட் இதோ

MI vs LSG
- Advertisement -

கடந்த மார்ச் 26-ஆம் தேதி முதல் மே 29-ஆம் தேதி வரை ரசிகர்களை 74 போட்டிகளுடன் மகிழ்வித்து வந்த ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான 5 கோப்பையை வென்ற வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ள மும்பை கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாக்-அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் முதல் அணியாக வெளியேறி அதிர்ச்சி கொடுத்தது. அதிலும் ஐபிஎல் வரலாற்றில் முதல் 8 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்த அணியாக சாதனை படைத்த மும்பை வரலாற்றில் முதல் முறையாக பங்கேற்ற 14 போட்டிகளில் 10 தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

இந்த தொடரில் ரோகித் சர்மா, இஷான் கிசான், கைரன் பொல்லார்ட் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க தடுமாறியதை காட்டிலும் பந்துவீச்சில் வள்ளல் பரம்பரையாக செயல்பட்டு ஏற்கனவே தடுமாறும் அவர்களுக்கு மேலும் அழுத்தத்தை கொடுத்த மோசமான பவுலர்கள் தான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்கள். மொத்தத்தில் வெற்றிகரமான ஐபிஎல் அணியாக திகழும் மும்பை அடுத்த சீசனுக்குள் தோல்விக்கு காரணமான வீரர்களை உடனடியாக கழற்றி விட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அப்படி இந்த வருடம் சுமாராக செயல்பட்டு தோல்விக்கு காரணமாக அமைந்த வீரர்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. பேசில் தம்பி: ஒரு காலத்தில் பும்ரா, போல்ட், பாண்டியா என்ற மிரட்டல் பந்துவீச்சு கூட்டணியை கொண்ட மும்பையில் இப்படி பவுலரா என்பது போல ஆரம்ப காலம் முதலே வள்ளல் பரம்பரையாக கருதப்படும் இவரை தேவையில்லாமல் ஏலத்தில் அந்த அணி நிர்வாகம் வாங்கியது.

அந்த நிலைமையில் முழு வாய்ப்பை கொடுக்க முடியாத அளவுக்கு பங்கேற்ற 5 போட்டிகளில் 5 விக்கெட்களை 9.50 என்ற மோசமான எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கிய இவரை அடுத்த வருடம் நிச்சயம் விடுவித்தால் மட்டுமே பந்துவீச்சை பலப்படுத்த முடியும்.

- Advertisement -

2. ஜெயதேவ் உனட்கட்: கடந்த 2017 ஐபிஎல் தொடரில் 24 விக்கெட்களை எடுத்தது தவிர ஏனைய அனைத்து வருடங்களிலும் சுமாராக பந்துவீசிய இவரை மும்பை வாங்கியதும் ஆச்சரியமாகவே அமைந்தது.

அந்த நிலைமையில் இந்த வருடம் 5 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை 9.50 என்ற சுமாரான எக்கனாமியில் எடுத்த இவரும் முழுமையான வாய்ப்பை வழங்க முடியாத அளவுக்கு மோசமாக பந்து வீசியதால் அடுத்த வருடம் இவரை தாராளமாக விடுவித்து விடலாம்.

- Advertisement -

3. டைமல் மில்ஸ்: இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் வெளிநாடுகளில் அசத்தினாலும் இந்திய மண்ணில் சுமாராக செயல்பட்டு கடைசியில் காயத்தால் வெளியேறினார்.

இவர் பங்கேற்ற 5 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை எடுத்தாலும் 11.80 என்ற படுமோசமான எக்கனாமியில் பந்து வீசியதால் அனைத்து பேட்ஸ்மேன்களும் இவரை சரமாரியாக அடித்தனர். எனவே காயத்துடன் வெளியேறிய இவரையும் மீண்டும் வாங்காமல் அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது.

- Advertisement -

4. பேபின் ஆலன்: வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டரான இவர் 1 போட்டியில் களமிறங்கி ஒரு விக்கெட் எடுத்தாலும் 46 ரன்களை 11.50 என்ற மோசமான எக்கனாமியில் எடுத்தார்.

மேலும் டிம் டேவிட் போன்ற ஒருசில தரமான ஆல்-ரவுண்டர்கள் இந்த வருடம் மும்பைக்கு கிடைத்துள்ளதால் அடுத்த வருடம் இவரை யோசனை செய்யாமல் விடுவித்து விடலாம்.

5. மயங் மார்கண்டே: 2018, 2019 ஆகிய சீசன்களில் மும்பைக்காக விளையாடி அதிலும் 2018இல் 15 விக்கெட்டுகள் எடுத்த இவரை மீண்டும் இம்முறை மும்பை நிர்வாகம் வாங்கியது.

ஆனால் இந்த வருடம் 2 போட்டிகளில் கொடுக்கப்பட்ட வாய்ப்பில் 1 விக்கெட் மட்டுமே எடுத்த இவர் 8.14 என்ற சுமாரான எக்கனாமியில் பந்துவீசி சிறப்பாக செயல்பட தவறினார். மேலும் ரித்திக் ஷாகின் போன்ற ஒருசில இளம் வீரர்கள் இந்த வருடம் மும்பைக்கு கிடைத்துள்ளதால் அடுத்த சீசனில் இவரை விடுவித்தால் அது சரியான முடிவாகவே இருக்கும்.

6. ரிலே மெரிடித்: கடந்த வருடம் பஞ்சாப் அணிக்காக 8 கோடிக்கு வாங்கப்பட்டு 5 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை 9.94 என்ற சுமாரான எக்கனாமியில் எடுத்து காயத்தால் வெளியேறிய இவரை இந்த வருடம் 1 கோடிக்கு மும்பை வாங்கியது.

இதையும் படிங்க : 50% உங்க தந்தையை போல் சாதிச்சா பெரிய சாதனை தான் – அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஜாம்பவான் அட்வைஸ்

அந்த நிலைமையில் 8 போட்டிகளில் பந்துவீசிய இவர் 8 விக்கெட்டுகளை 8.43 என்ற எக்கனாமியில் எடுத்து கொஞ்சம் முன்னேறினாலும் மீண்டும் சுமாராகவே செயல்பட்டார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவரும் இந்திய ஆடுகளங்களில் சிறப்பாக செயல்பட தவறுவதால் அடுத்த வருடம் விடுவித்து வேறு வீரர்களை வாங்கலாம்.

Advertisement