வெளிநாட்டு டி20 தொடரில் பங்கேற்கும் 7 இந்திய கிரிக்கெட் வீரர்கள்! தமிழக வீரரும் உண்டு – பி.சி.சி.ஐ அனுமதி

DPL 2021/22
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி வரும் மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்கள் நடைபெற உள்ளது. இந்த வருடம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் 2 முறை சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

ipl trophy

- Advertisement -

விலைபோகாத வீரர்கள்:
முன்னதாக இந்தத் தொடருக்காக கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருவில் வீரர்களுக்கான ஏலம் மெகா அளவில் 2 நாட்கள் நடைபெற்றது. அதில் இந்தியா மற்றும் உலக அளவில் இருந்து மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்ற போதிலும் இறுதியில் 204 வீரர்கள் மட்டுமே 551 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்டார்கள்.

குறிப்பாக இஷன் கிஷன், தீபக் சஹர், ஷ்ரேயஸ் ஐயர் போன்ற நட்சத்திர இந்திய வீரர்கள் இந்த ஏலத்தில் மிகப்பெரிய தொகைக்கு ஒப்பந்தமாகி அசத்தினார்கள். மேலும் லியம் லிவிங்ஸ்டன், டிம் டேவிட் போன்ற வெளிநாட்டு நட்சத்திரங்களும் இந்த ஐபிஎல் ஏலத்தில் பல கோடிகளுக்கு மேல் ஏலம் போனார்கள். ஆனால் காலம் காலமாக மிகச் சிறப்பாக விளையாடி “மிஸ்டர் ஐபிஎல்” எனப் பெயர் பெற்ற சுரேஷ் ரெய்னா, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் போன்ற ஒருசில உச்சபட்ச நட்சத்திர வீரர்களை எந்த ஒரு அணியும் வாங்காதது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவர்களுடன் மேலும் பல முக்கிய இந்திய வீரர்களும் ஏலத்தில் விலை போகவில்லை.

Suresh raina

டிபிஎல் தொடரில் 7 வீரர்கள்:
இந்நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் ஏலம் போகாத 7 முக்கிய இந்திய வீரர்கள் வங்கதேசத்தில் நடைப்பெறும் டிபிஎல் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஆம் வங்கதேசத்தில் “டாக்கா பிரீமியர் டிவிஷன் கிரிக்கெட் லீக்” எனும் உள்ளூர் முதல் தர டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2013 முதல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் 8-வது சீசன் மார்ச் 15 முதல் ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இதில் லீக் சுற்று உட்பட மொத்தம் 73 போட்டிகள் நடைபெற உள்ளன.

- Advertisement -

இந்த தொடரில் தற்போது நடைபெறும் 2021/22 சீசனில் பங்கேற்பதற்காக இந்தியாவின் நட்சத்திர வீரர் ஹனுமா விஹாரி, அபிமன்யு ஈஸ்வரன், பர்வேஸ் ரசூல், அசோக் மேனரியா, சிராக் ஜானி, குரிண்டர் சிங் ஆகிய வீரர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்த பாபா அபராஜித் ஆகிய 7 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக இந்திய டெஸ்ட் அணியில் மட்டும் விளையாடி வரும் ஹனுமா விஹாரி சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான தொடரில் 124 ரன்களை 41.33 என்ற சராசரியில் குவித்து நல்ல பார்மில் உள்ளார். தற்போது இந்தியாவில் இருக்கும் அவர் இந்த டிபிஎல் தொடரின் முதல் 3 போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தெரியவருகிறது.

Vihari

வெளிநாட்டு தொடரில் இந்திய வீரர்கள்:
அதேபோல் ரஞ்சி கோப்பையில் அபாரமாக பேட்டிங் செய்த தமிழகத்தின் பாபா அபாரஜித் சூப்பரான பார்மில் உள்ளார். இவருடன் இந்த தொடரில் பங்கேற்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள எஞ்சிய வீரர்கள் அனைவரும் முதல் போட்டியில் இருந்து டிபிஎல் தொடரில் விளையாட உள்ளனர். இதில் பாபா அபராஜித், ஹனுமா விஹாரி அபிமன்யு ஈஸ்வரன் போன்ற இந்திய வீரர்கள் கடந்த வருடம் ரத்து செய்யப்பட்ட இந்த தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

- Advertisement -

மேலும் இந்தத் தொடரில் இதற்கு முன்பு தினேஷ் கார்த்திக், மனோஜ் திவாரி, யூசுப் பதான் போன்ற நட்சத்திர இந்திய வீரர்கள் விளையாடி உள்ளார்கள். இந்த டிபிஎல் தொடரில் இந்த வருடம் அனைத்து அணிகளிலும் குறைந்தபட்சம் ஒரு வெளிநாட்டு வீரர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். அந்த வகையில் 7 இந்திய வீரர்களையும் சேர்த்து பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஹபீஸ், ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த சிக்கந்தர் ராஜா போன்ற மேலும் சில வெளிநாட்டு வீரர்களும் இந்த தொடரில் விளையாட உள்ளனர்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : தடையின்றி போட்டிகளை நடத்த 10 அணிகளுக்கும் செக் வைத்த பிசிசிஐ – புதிய ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் இதோ

பொதுவாகவே இந்திய வீரர்களை வெளிநாட்டு டி20 தொடர்களில் பிசிசிஐ அனுமதிக்காமல் இருந்து வருவது பலருக்கும் ஏமாற்றம் அளித்து வந்தது. இருப்பினும் சமீப காலங்களாக இது போன்ற வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்க பிசிசிஐ அனுமதி அளிக்க தொடங்கியுள்ளதால் ஐபிஎல் மற்றும் இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement