ஐபிஎல் 2022 : தடையின்றி போட்டிகளை நடத்த 10 அணிகளுக்கும் செக் வைத்த பிசிசிஐ – புதிய ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் இதோ

IPL 2022
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்குகிறது. இம்முறை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கு பெறுவதால் 74 போட்டிகள் கொண்ட பிரமாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் நடைபெற உள்ளது. வரும் மே 29-ஆம் தேதியன்று மாபெரும் இறுதிப் போட்டியுடன் நிறைவுக்கு வரும் இந்த தொடரில் வரும் மார்ச் 26 முதல் மே 22 வரை நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுக்கான முழு அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ipl

- Advertisement -

இந்தியாவிலேயே ஐபிஎல் தொடர்:
இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக கருதப்படும் இந்த ஐபிஎல் தொடர் கடந்த வருடம் இந்தியாவில் துவங்கி நடைபெற்று வந்தது. குறிப்பாக லீக் சுற்றின் முதல் 29 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் திடீரென ஐபிஎல் அணிகளில் ஏற்பட்ட கரோனா பரவல் காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் இந்த தொடரை நடத்துவதற்கு பல தடைகள் ஏற்பட்ட நிலையில் பிசிசிஐக்கு சுமார் 2000 கோடி ரூபாய் மாபெரும் நஷ்டம் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டது.

அதன் காரணமாக இந்த தொடரை எப்படியாவது நடத்தியே தீரவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட பிசிசிஐ பல முயற்சிகளை எடுத்து ஒரு வழியாக துபாயில் எஞ்சிய தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. அப்படிபட்ட நிலைமை இந்த வருடமும் நீடித்ததால் இந்த தொடர் இந்தியாவிலேயே நடைபெறுமா என்ற கேள்வி இருந்து வந்தது. அந்த வேளையில் ஐபிஎல் 2022 தொடர் இந்தியாவில்தான் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அறிவித்திருந்தார்.

IPL

இருப்பினும் இம்முறை வீரர்களின் நலன் கருதி வழக்கமாக நடைபெறும் 7 – 8 நகரங்களுக்கு பதிலாக மும்பை, புனே, அஹமதாபாத் ஆகிய 3 நகரங்களில் உள்ள 5 மைதானங்களில் மட்டும் ஐபிஎல் 2022 தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று தொடர் மும்பையில் உள்ள வான்கடே, டிஒய் பாட்டில், ப்ராபோர்ன், எம்சிஏ ஆகிய 4 மைதானங்களிலும் இறுதிப் போட்டி உள்ளிட்ட பிளே ஆஃப் சுற்று அஹமதாபாத் நகரிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

செக் வைத்த பிசிசிஐ:
இந்நிலையில் ஐபிஎல் 2022 தொடரை இந்தியாவிலேயே தடையின்றி முழுமையாக நடத்துவதற்காக இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து 10 அணிகளுக்கு பிசிசிஐ புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஏனெனில் தங்கள் அணியில் உள்ள வீரர்களை அந்தந்த அணி நிர்வாகங்கள் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் சரியாக கட்டுக்கோப்புடன் நடத்தினால் மட்டுமே ஐபிஎல் தொடர் முழுமையாக நடத்தி முடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதை மீறும் அணிகளுக்கு கடுமையான தண்டனையையும் பிசிசிஐ வழங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த புதிய விதிமுறைகளை பற்றி பார்ப்போம்.

IPL-bcci

1. ஐபிஎல் 2022 தொடரின் போது ஒரு அணியைச் சேர்ந்த ஏதேனும் ஒரு வீரர், அணியைச் சேர்ந்த அதிகாரபூர்வ நபர் போன்றோர் கட்டுப்பாட்டு வளையத்தை மீறினால் அவர்கள் பாதுகாப்பு விதிகள் முறைகளின்படி 7 நாட்கள் மீண்டும் தனிமைப்படுத்தப் படுவார்கள். அந்த காலகட்டத்தில் அவர்கள் தவறவிடும் போட்டிகளுக்கான சம்பளம் வழங்கப்பட மாட்டாது.

- Advertisement -

2. அதே தவறை 2-வது முறையாக செய்பவர்களுக்கு 7 நாட்கள் மீண்டும் தனிமைப்படுத்த படுவதுடன் ஒரு போட்டியில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்படும்.

kkr

3. அந்த தவறை 3-வது முறையாக செய்யும் பட்சத்தில் அந்த அணியில் மட்டுமல்லாது எஞ்சிய ஐபிஎல் தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவார். மேலும் அந்த வீரர் அல்லது தனி நபருக்கு பதிலாக மாற்று வீரர் அல்லது நபரை தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது.

- Advertisement -

4. இது மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஒரு வீரரின் குடும்பத்தைச் சேர்ந்த ஏதேனும் ஒரு நபர் கட்டுப்பாட்டு வளையத்தை மீறும் பட்சத்தில் அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள்.

5. அதே தவறை 2-வது முறையாக செய்தால் 7 நாட்கள் மீண்டும் தனிமைப்படுத்த படுவதுடன் எஞ்சிய தொடரில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்படுவார்கள்.

6. அதேபோல் ஐபிஎல் தொடரின்போது தனிமைப் படுத்திக் கொள்ளாத ஏதேனும் ஒரு நபர் அணிக்குள் நுழைய அந்த அணி நிர்வாகம் அனுமதித்தது தெரிய வருமேயானால் அதற்கு தண்டனையாக அந்த அணி நிர்வாகத்திற்கு ரூபாய் 1 கோடி அபராதம் விதிக்கப்படும்.

mi 1

7. அதே தவறை அந்த அணி நிர்வாகம் மீண்டும் செய்தால் அந்த அணி பெற்றுள்ள புள்ளிகளிலிருந்து ஒரு புள்ளி கழிக்கப்படும்.

8. அதே தவறை 3-வது முறையாக செய்யும் பட்சத்தில் அந்த அணி பெற்றுள்ள மொத்த புள்ளிகளிலிருந்து 2 புள்ளிகள் கழிக்கப்படும்.

Advertisement