ஐ.பி.எல் 2025 : சி.எஸ்.கே அணி தக்கவைக்கப்போகும் 6 வீரர்கள் யார்? – நிர்வாகத்தின் முடிவு என்ன?

CSK
- Advertisement -

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலத்திற்கு முன்னர் எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம்? என்கிற ரீட்டென்ஷன் விதிமுறைகளை நேற்று ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டிருந்தது. அந்த வகையில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைக்கலாம் என்றும் அதில் எத்தனை இந்திய வீரர்கள் வேண்டுமென்றாலும் எத்தனை வெளிநாட்டு வீரர்களை வேண்டுமென்றாலும் தக்க வைக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

சி.எஸ்.கே அணி தக்கவைக்கப்போகும் வீரர்கள் யார்? :

அதேபோன்று ஓய்வு பெற்ற ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிய வீரர்களை அன் கேப்டு வீரராக தக்கவைக்கலாம் என்றும் கூறியுள்ளது. அந்த வகையில் தற்போது 43 வயதை எட்டியுள்ள தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளதால் அவரை அன் கேப்ட்டு வீரராக சென்னை அணி தக்க வைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அதே போன்று அடுத்த ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணி தக்க வைக்கப்போகும் ஆறு வீரர்கள் யார்? யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. அந்த வீரர்களின் பட்டியல் குறித்து இங்கு காணலாம். சென்னை அணி தங்களது முதல் ரீடெயின்டு வீரராக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை தக்கவைக்கும்.

அதேபோன்று இரண்டாவது வீரராக சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா தக்கவைக்கப்படுவார். மூன்றாவது வீரராக சென்னை அணியின் எதிர்கால நட்சத்திர வீரராக பார்க்கப்படும் இலங்கை அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரானா தக்கவைக்கப்படுவது உறுதி. மீதமுள்ள மூன்று வீரர்கள் தான் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

அதிலும் தோனி நான்காவது வீரராக தக்க வைக்கப்படும் வேளையில் மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு ஷிவம் துபே, ஷர்துல் தாகூர், ரச்சின் ரவீந்திரா, துஷார் தேஷ்பாண்டே, டேவான் கான்வே, தீபக் சாஹர் என ஏராளமான வீரர்கள் காத்திருக்கின்றனர். ஆனாலும் 5 ஆவது வீரராக சிவம் துபே தக்கவைப்படலாம். ஏனெனில் கடைசி மூன்று சீசனில் சிஎஸ்கே அணிக்காக அவர் 1100-க்கும் மேற்பட்ட ரன்களை விளாசியுள்ளார். எனவே ஐந்தாவது வீரராக அவர் தக்கவைக்கப்படலாம்.

இதையும் படிங்க : போட்டியின் மூன்றாவது நாளான இன்றாவது ஆட்டம் நடைபெறுமா? – வானிலை அறிக்கை சொல்வது என்ன?

கடைசி வீரராக ரச்சின் ரவீந்திரா தக்கவைக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பது மட்டுமின்றி இடது கை வீரராக இருக்கும் அவர் பகுதிநேர சுழற்பந்து வீச்சாளராகவும் இருபதால் அடுத்த சுரேஷ் ரெய்னாவாக அவரை மாற்ற வாய்ப்பு உள்ளது. அதேபோன்று சிஎஸ்கே அணியின் கோச் பிளமிங்கும் அவர் மீது நிறைய நம்பிக்கை வைத்துள்ளதால் ரச்சின் ரவீந்திரா கடைசி வீரராக தக்க வைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

Advertisement