போட்டியின் மூன்றாவது நாளான இன்றாவது ஆட்டம் நடைபெறுமா? – வானிலை அறிக்கை சொல்வது என்ன?

Kanpur
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது கான்பூர் நகரில் செப்டம்பர் 27-ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதல் நாள் நடைபெற்ற ஆட்டத்தில் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடியது.

மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெறுமா? :

அதன்படி முதலில் விளையாடிய வங்கதேச அணியானது 35 ஓவர்கள் விளையாடி மூன்று விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை குவிந்திருந்த போது மழையால் போட்டி கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று நடைபெறயிருந்த இரண்டாம் நாள் ஆட்டமம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

- Advertisement -

இவ்வேளையில் போட்டியின் இன்றைய மூன்றாவது நாள் ஆட்டமாவது நடைபெறுமா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அந்த வகையில் இன்றைய மூன்றாவது நாள் ஆட்டம் காலை 9:30 மணிக்கு துவங்க வேண்டியிருந்தது. ஆனால் நேற்று பெய்த கனமழை காரணமாக இன்று காலை போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து மீண்டும் இன்று காலையும் மழை பெய்ததால் போட்டி துவங்க மூன்று மணி நேரமாவது தாமதமாகும் என்ற தகவல் வெளியாகியது. அதன் பின்னர் தற்போது 12 மணிக்கு மீண்டும் அம்பயர்கள் மைதானத்திம் நிலையை பரிசோதித்து உள்ள வேளையில் தற்போது அதிக அளவிலான தண்ணீர் மைதானத்தில் தேங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

- Advertisement -

இதன்காரணமாக மேலும் ஒரு செஷன் போட்டி நடைபெற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அதே போன்று மைதானத்தில் இன்னும் மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வருவதால் சில பகுதிகளில் அதிகளவு மழை நீர் தேங்கியுள்ளது. அதை நீக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க : இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை எந்த சேனலில் பார்க்கலாம் – விவரம் இதோ

இன்னும் சிறிது நேரத்தில் மீண்டும் மழை பெய்யும் பட்சத்தில் மூன்றாம் நாள் ஆட்டமும் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. ஒருவேளை மூன்றாம் நாள் ஆட்டமும் கைவிடப்பட்டால் கடைசி இரண்டு நாட்களில் போட்டியின் முடிவு தெரியுமா? தெரியாதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisement