ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது வங்கதேச அணியை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
டி20 தொடரை எந்த சேனலில் பார்க்கலாம் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கான்பூர் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாவது போட்டி மழையால் பாதிக்கப்பட்ட்டுள்ளதால் இந்த போட்டியில் டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளது.
இருந்தாலும் இந்திய அணி இந்த தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றும் என்பது உறுதியாகி உள்ளது. இந்த டெஸ்ட் தொடரானது அக்டோபர் ஒன்றாம் தேதி முடிவுக்கு வருகிறது. அதற்கடுத்து ஐந்து நாட்கள் இடைவெளிக்கு பின்னர் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணியினருக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது துவங்க உள்ளது.
இந்த டி20 தொடருக்கான சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்ட வேளையில் இந்திய அணி விரைவில் பயிற்சியினை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்? போட்டி எங்கு நடைபெறும்? எத்தனை மணிக்கு நடைபெறும்? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியானது அக்டோபர் 6-ஆம் தேதி குவாலியர் மைதானத்திலும், இரண்டாவது போட்டி அக்டோபர் -ஆம் தேதி டெல்லியிலும், மூன்றாவது போட்டி அக்டோபர் 12-ஆம் தேதி ஹைதராபாத் நகரிலும் நடைபெற இருக்கிறது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரானது இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்கும் என்றும் 6.30 மணிக்கு டாஸ் போடப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : கபில் தேவ், அஷ்வினுக்கு அடுத்து 3 ஆவது இந்திய வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்தவுள்ள – ரவீந்திர ஜடேஜா
அதே போன்று இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையேயான இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் கலர் சினி ஃபிளிக்ஸ் ஆகிய சேனல்களில் பார்க்கலாம். மேலும் இந்த தொடரை ஆன்லைன் மூலமாக பார்க்க விரும்புவோர் ஜியோ சினிமா மொபைல் செயலியின் மூலம் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



