இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்ற வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
ஜடேஜா நிகழ்த்தவுள்ள சாதனை :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 27-ஆம் தேதி கான்பூர் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து தற்போது வங்கதேச அணி தங்களது முதல் இன்னிங்சில் விளையாடி வரும் வேளையில் போட்டியின் முதல் நாளில் அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்திருந்த வேளையில் மழை காரணமாக போட்டி தடைபட்டது.
அதனைத்தொடர்ந்து போட்டியின் இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் ஆகியவை மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தும் வாய்ப்புள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் இந்திய அணிக்காக இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் எடுத்த வீரர்களாக கபில்தேவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் மட்டுமே உள்ளனர். அந்த வரிசையில் தற்போது ஜடேஜாவும் மூன்றாவது இந்திய வீரராக இந்த சாதனையை படைக்க காத்திருக்கிறார். ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 ஆயிரம் ரகளை கடந்துவிட்ட ஜடேஜா 299 விக்கெட்களுடன் சாதனைக்காக காத்திருக்கிறார்.
இதையும் படிங்க : ஐபிஎல் 2025இல் தல தோனி விளையாடுவது உறுதி.. சிஎஸ்கே அணிக்காக விதிமுறையையே மாற்றிய பிசிசிஐ
இந்த டெஸ்ட் போட்டியில் அவர் மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தும் பட்சத்தில் அந்த சாதனையை நிகழ்த்துவார். அதோடு மட்டுமின்றி இந்தியா வெற்றி பெற்ற டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 2000 ரன்கள் மற்றும் 200 விக்கெட் என்ற எந்த வீரரும் செய்யாத சாதனையை ஜடேஜா நிகழ்த்த காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



