2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற வாய்ப்புள்ள 5 நட்சத்திர வீரர்கள் – லிஸ்ட் இதோ

Rohit-Sharma
- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்பிப்பதற்காக 2019இல் ஐசிசி அறிமுகப்படுத்திய டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பை ரசிகர்களிடம் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. பொதுவாக ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைகளை வைத்து தான் சாதாரண நாட்களில் நடைபெறும் இருதரப்பு தொடர்கள் முதல் வீரர்களின் எதிர்கால திட்டங்கள் வரை அமையும். குறிப்பாக தேசத்துக்காக நிறைய வருடங்கள் விளையாடி ரசிகர்களிடம் புகழ்பெற்ற நட்சத்திர வீரர்கள் தங்களுடைய கேரியரை தீர்மானிக்கும் முக்கிய முடிவுகளை ஐசிசி உலக கோப்பைகளை மையப்படுத்தியே எடுப்பார்கள்.

wtc ind

- Advertisement -

அந்த வகையில் ஜூன் மாதம் லண்டன் ஓவலில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் அடுத்ததாக 2025இல் தான் நடைபெற உள்ளதால் அதற்கு முன்பாகவே சில முக்கிய வீரர்கள் வயது மற்றும் பார்ம் காரணமாக ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்தை சந்தித்துள்ளார்கள். அத்துடன் எப்போதுமே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை விட 5 நாட்கள் விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் கடினமானது என்பதால் மூத்த வீரர்கள் முதலில் அதற்கு தான் முழுக்கு போடுவார்கள். எனவே அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன் ஓய்வு பெறுவார்கள் என்று கருதப்படும் நட்சத்திர வீரர்களை பற்றி பார்ப்போம்:

5. ஷாகிப் அல் ஹசன்: கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மிகச்சிறந்த சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக வங்கதேசத்திற்கு நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து அந்நாட்டு ரசிகர்களால் ஜாம்பவானாக கொண்டாடப்படும் இவர் சமீப காலங்களாகவே சுமாரான ஃபார்மில் தவிக்கிறார். போதாகுறைக்கு தன்னுடைய கோபமான குணத்தால் சமீப காலங்களில் வங்கதேச வாரியத்திற்கு அவருக்கும் நிறைய சச்சரவுகள் ஏற்பட்டு தணிந்தது.

KL Rahul Shakib Al Hasan

எனவே 35 வயதை கடந்து விட்ட இவர் தன்னுடைய கேரியரை நீட்டிப்பதற்காக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடும் வகையில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறலாம்.

- Advertisement -

4. ட்ரெண்ட் போல்ட்: நவீன கிரிக்கெட்டில் நியூசிலாந்தின் மிகச்சிறந்த வேகப்பந்துத் வீச்சாளரான இவர் கடந்த வருடம் நியூசிலாந்தின் மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து அதிரடியாக வெளியேறினார். அதாவது டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும் வகையில் நாட்டுக்காக தாம் விரும்பும் போட்டிகளில் மட்டும் விளையாடும் முடிவை எடுத்த அவர் 20, 50 ஓவர் உலகக்கோப்பை போன்ற வெள்ளைப் பந்து உலக கோப்பை போன்ற முக்கிய தொடர்கள் மட்டுமே நியூசிலாந்துக்காக விளையாடுவார்.

boult

அதனாலேயே சமீபத்திய பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் விளையாடாத அவர் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற மறைமுக அறிவிப்பை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடலாம்.

- Advertisement -

3. ஜேம்ஸ் ஆண்டர்சன்: வயதாக வயதாக பழைய சரக்கை போல் மிகச் சிறப்பாக செயல்பட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்த வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்துள்ள இவர் 40 வயதிலும் அசத்தலாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஸ் பைனலுக்கு தகுதி பெற முடியாத அளவுக்கு சமீப காலங்களில் சுமாராக செயல்பட்ட இங்கிலாந்து தற்போது பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய அதிரடிப்படையாக மாறி வருகிறது.

James-Anderson

எனவே கிறிஸ் ஓக்ஸ், சாம் கரண், மார்க் வுட் போன்ற அடுத்த தலைமுறை பவுலர்களுக்கு வழி விட வேண்டிய நேரம் அவருக்கு வந்து விட்டது. இருப்பினும் தற்போதைக்கு ஓய்வு பெறும் திட்டமில்லாத அவர் நிச்சயமாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் 42 வயதை கடந்து விளையாடுவார் என்பது 90% சந்தேகமாகும்.

- Advertisement -

2. டேவிட் வார்னர்: ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரமான இவர் சமீப காலங்களில் சதமடிக்க முடியாமல் தவித்து வந்த கதைக்கு சமீபத்தில் தென் ஆப்பிரிக்க தொடரில் முற்றுப்புள்ளி வைத்தார்.

David-Warner

இருப்பினும் 36 வயதை கடந்து விட்ட இவர் ஒருநாள், டி20, ஐபிஎல் போன்ற வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது கேரியரை நீட்டிப்பதற்காக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு பின் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவார் என்று உறுதியாக நம்பலாம்.

1. ரோஹித் சர்மா: வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அசத்திய இவர் 2013 – 2019 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் திண்டாடினார். இருப்பினும் 2019 உலக கோப்பையில் 5 சதங்களை அடித்து ஓப்பனிங் பேட்ஸ்மேனாக தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கால் தடம் பதித்துள்ள அவர் கேப்டனாகவும் முன்னேறியுள்ளார். ஆனால் 35 வயதை கடந்த விட்ட அவர் சமீப காலங்களில் ஒருநாள், டி20, ஐபிஎல் போன்ற வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலேயே திண்டாடி வருகிறார்.

Rohith

இதையும் படிங்க: அனுபவமும் பார்மும் இருக்கு, இம்முறை இந்தியாவை அவங்க ஊர்லயே தோற்கடிக்க வரோம் – ஆஸி கேப்டன் பட் கமின்ஸ் எச்சரிக்கை

அதிலும் குறிப்பாக சுமாரான பிட்னஸ் காரணமாக தவிக்கும் அவரால் இனிமேலும் 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்குவது மிகவும் கடினமாகும். எனவே 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தியாவை சிறப்பாக வழி நடத்தி கோப்பையை வென்று கொடுக்க முயற்சிக்கும் அவர் வென்றாலும் இல்லையென்றாலும தன்னுடைய வெள்ளை பந்து கேரியரை நீட்டிக்க டெஸ்ட் போட்டிகளில் விரைவில் ஓய்வு பெற்றதாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

Advertisement