அனுபவமும் பார்மும் இருக்கு, இம்முறை இந்தியாவை அவங்க ஊர்லயே தோற்கடிக்க வரோம் – ஆஸி கேப்டன் பட் கமின்ஸ் எச்சரிக்கை

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்ற டெஸ்ட் தொடரை 2 – 0 (3) என்ற கணக்கில் வென்ற ஆஸ்திரேலியா புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து ஜொலித்து வருகிறது. சொல்லப்போனால் வரும் ஜூன் மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பைனலுக்கு முதல் அணியாக தகுதி பெறும் வாய்ப்பை ஆஸ்திரேலியா 90% உறுதி செய்துள்ளது என்ற கூறலாம். அந்த எஞ்சிய 10% வாய்ப்பும் வரும் பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்றால் உறுதியாகி விடும் என்ற நிலைமைக்கு ஆஸ்திரேலியா வந்துள்ளது.

AUs vs IND

- Advertisement -

பொதுவாகவே 5 உலக கோப்பைகளை வென்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பெரும்பாலும் உலகின் நம்பர் ஒன் அணியாக செயல்பட்டு சர்வதேச கிரிக்கெட்டின் முடி சூடா மன்னனாக திகழும் ஆஸ்திரேலியா சொந்த மண்ணுக்கு நிகராக வெளிநாட்டு மண்ணிலும் வெற்றிகளை குவிக்கும் அணியாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது தென்னாபிரிக்காவை தோற்கடித்த புத்துணர்ச்சியுடன் உள்ள ஆஸ்திரேலியா இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முயற்சிக்கவுள்ளது.

சவால் காத்திருக்கு:
மறுபுறம் வெளிநாடுகளில் லேசான தடுமாற்றம் இருந்தாலும் சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாக திகழும் இந்தியா 2012க்குப்பின் கடந்த 10 வருடங்களாக எந்த அணிக்கு எதிராகவும் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றதில்லை. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2004க்குப்பின் சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா இம்முறையும் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Steve Smith Virat Kohli IND vs AUS

அதிலும் குறிப்பாக 2018/19 மற்றும் 2020/21 ஆகிய வருடங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்ற இந்தியா ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாகவும் அடுத்தடுத்த தொடர்களிலும் தோற்கடித்த முதல் ஆசிய அணியாக வரலாறு படைத்தது. எனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் என்பதையும் தாண்டி சொந்த மண்ணில் சந்தித்த அந்த தோல்விகளுக்கு இம்முறை இந்தியாவை அதன் சொந்த மண்ணில் பழிவாங்க ஆஸ்திரேலியா போராடும் என்று உறுதியாக எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த வருடம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளில் விளையாடிய அனுபவம் தற்போதுள்ள ஃபார்ம் ஆகியவற்றை பயன்படுத்தி இம்முறை நிச்சயமாக இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்போம் என்று தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய பின் ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் கூறியுள்ளார். இது பற்றி அத்தொடரில் வென்ற பின் அவர் பேசியது பின்வருமாறு.

Cummins

“நாம் எப்போதும் இருக்கப் போவதைப் போலவே எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன். இந்த கோடைகாலம் நமக்கு அற்புதமாகவே அமைந்தது. மேலும் இந்த வெற்றியால் நாங்கள் சூழ்நிலைக்கு உட்படுத்திக் கொள்ளும் திறமையை பெற்றுள்ளோம் என்று உணர்கிறேன். அத்துடன் கடந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் விளையாடிய அனுபவத்தைப் பெற்றிருப்பது உண்மையிலேயே இந்தியாவுக்கு நல்ல சவாலை கொடுப்பதற்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது”

- Advertisement -

“அங்கு நாங்கள் ஒண்ணும் கண்ணை மூடிக்கொண்டு போகப் போவதில்லை. குறிப்பாக அடுத்த 12 மாதங்களில் எப்படி விளையாட பார்க்கிறோம் என்பதை பிரதிபலிக்க அடுத்த சில வாரங்களில் தேவையான முடிவுகளையும் புத்துணர்ச்சிகளையும் எடுக்க உள்ளோம். மேலும் இந்தியாவில் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்கள் இருக்கும் என்பதால் அத்தொடரில் நிச்சயமாக இடது கை ஸ்பின்னர் ஆஸ்டன் அகர் இருப்பார். அவரை மேற்கொண்டும் சோதித்து பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் இத்தொடரில் 800 ரன்கள் அடித்த போதும் அவர் சிறப்பாக பந்து வீசினார்”

இதையும் படிங்க: அந்த 2 திறமை ஏபிடி, ரசல் கிட்ட கூட இல்ல, சூரியகுமார் தான் பெஸ்ட் – அஜய் ஜடேஜா பாராட்டும் காரணம் இதோ

“அவரைப் போன்றவருக்கு அது எளிதல்ல என்றாலும் அவர் தன்னுடைய வேலையில் சிறப்பாக செயல்பட்டார். மேலும் அங்கு (இந்தியாவில்) மைதானங்கள் சற்று வெடிப்பாகவும் மற்றும் அதிகமாக சுழலும் என்று நம்புகிறேன். அதே சமயம் இந்தியாவில் எப்படி இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்காத பிட்ச்களும் இருக்க வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

Advertisement