அடுத்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்கு முன் ஓய்வு பெற வாய்ப்புள்ள இரு நாடுகளை சேர்ந்த 5 நட்சத்திர வீரர்கள்

IND-vs-AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இம்முறை இந்திய மண்ணில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐசிசி தர வரிசையில் டாப் 2 இடங்களில் இருக்கும் இவ்விரு அணிகளில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ரோகித் சர்மா, பட் கமின்ஸ் உட்பட ஏராளமான உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்திருப்பது ஆரம்பம் முதலே உலக அளவிலான ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது. கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இத்தொடர் நூற்றாண்டு சிறப்புமிக்க ஆஷஸ் தொடருக்கு நிகராக உலகத்தரம் வாய்ந்த டெஸ்ட் தொடராக உருவெடுத்துள்ளது.

Sachin Tendulkar Allan Border Sunil Gavaskar

- Advertisement -

இந்த கோப்பையின் அடுத்த தொடர் வரும் 2024 டிசம்பர் – 2025 ஜனவரி வரை 2 மாதங்கள் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற உள்ளது. இருப்பினும் தற்போது நடைபெற்று வரும் தொடரில் விளையாடும் சில நட்சத்திர வீரர்கள் அடுத்து நடைபெறும் அந்தத் தொடரில் வயது காரணமாக ஓய்வு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களைப் பற்றி பார்ப்போம்:

5. ரவிச்சந்திரன் அஷ்வின்: கடந்த 10 வருடங்களாக இந்திய டெஸ்ட் அணியின் முதன்மை ஸ்பின்னராக ஜொலித்து வரும் இவர் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் கூட 8 விக்கெட்டுகளை சாய்த்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். மேலும் 450 விக்கெட்டுகளை எடுத்த 2வது இந்திய வீரர் என்ற வரலாறு படைத்த அவர் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரிலும் அதிக விக்கெட்டுகளை எடுத்த 2வது வீரர் என்ற சாதனை படைத்தார்.

அப்படி ஏற்கனவே ஜாம்பவானாக போற்றப்படும் அளவுக்கு சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் அடுத்த தொடரின் போது 39 வயதை தொட்டு விடுவார் என்பதால் இதுவே அவருடைய கடைசி பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடராக இருக்கலாம்.

4. நேதன் லயன்: நவீன கிரிக்கெட்டில் அஷ்வினுக்கு நிகராக 450+ விக்கெட்டுகளை எடுத்து ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு பின் ஆஸ்திரேலியாவின் மகத்தான ஸ்பின்னராக ஜொலித்து வரும் இவர் அடுத்ததாக தங்களது சொந்த மண்ணில் நடைபெறப்போகும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் போது 38 வயதில் தொட்டு விடுவார்.

- Advertisement -

lyon 2

மேலும் தற்போதைய தொடரில் தடுமாறி வரும் அவர் அடுத்த சில வருடங்களில் டோட் முர்பி போன்ற இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் அடுத்த தொடருக்கு முன் ஓய்வு பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் எப்போதுமே ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்களை விட ஆஸ்திரேலியாவை போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட வயதுக்கு பின் அதிக நாட்கள் விளையாடி காலத்தை தள்ள மாட்டார்கள்.

3. டேவிட் வார்னர்: நவீன கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த தொடக்க வீரராக ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் 2024 டி20 உலக கோப்பையுடன் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.

- Advertisement -

David-Warner

ஏனெனில் கடந்த சில வருடங்களாகவே பழைய பன்னீர்செல்வமாக அடித்து நொறுக்க முடியாமல் தடுமாறும் அவர் தற்போதைய தொடரின் முதல் போட்டியிலும் சுமாராகவே செயல்பட்டார். அதனால் 36 வயதாகும் அவர் நிச்சயமாக அடுத்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடுவதை பார்ப்பது அரிதாகும்.

2. செடேஸ்வர் புஜாரா: நவீன கிரிக்கெட்டில் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் ஆஸ்திரேலிய மண்ணில் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் இந்தியா டெஸ்ட் தொடர்களை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டவர்.

- Advertisement -

Pujara 1

இருப்பினும் சமீப காலங்களாகவே தடுமாறும் இவர் கடந்த வருடம் அதிரடியாக நீக்கப்பட்டாலும் போராடி கம்பேக் கொடுத்து தற்போது 100 டெஸ்ட் போட்டியில் விளையாடும் 12வது இந்திய வீரராக சாதனை படைக்க உள்ளார். எனவே அடுத்த தொடரில் 38 வயதை கடந்து விடுவார் என்பதால் பார்ம் மற்றும் இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் இதுவே அவருடைய கடைசி பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடராக அமையலாம்.

1. ரோஹித் சர்மா: டெஸ்ட் கிரிக்கெட்டில் தாமதமாக சிறப்பாக செயல்பட துவங்கிய இவர் தற்போது கேப்டனாக முதல் போட்டியில் சதமடித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இருப்பினும் வெளிநாட்டு மண்ணில் 25 போட்டிகளில் வெறும் 1 சதத்துடன் 31.30 என்ற சுமாரான சராசரியில் எடுத்துள்ள அவர் ஏற்கனவே நிறைய தருணங்களில் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.

Rohit Sharma

இதையும் படிங்க: IND vs AUS : நாளைய இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றம் – பிளேயிங் லெவன் இதோ

எனவே தனது வெள்ளை பந்து கிரிக்கெட் கேரியரை நீட்டிப்பதற்காக 35 வயதை கடந்து விட்ட அவர் அடுத்த தொடருக்கு முன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற அதிக வாய்ப்புள்ளது.

Advertisement