IND vs AUS : நாளைய இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றம் – பிளேயிங் லெவன் இதோ

IND vs AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி நடைபெற்ற நாக்பூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 17-ஆம் தேதி நாளை டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.

IND

- Advertisement -

இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஏனெனில் கடந்த போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருந்தாலும் பேட்டிங்கில் டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா மட்டுமே சதம் அடித்து அசத்தியிருந்தார்.

அவரை தவிர்த்து மிடில் ஆர்டரில் புஜாரா, விராட் கோலி, சூரியகுமார் யாதவ், கே.எஸ் பரத் என அனைவருமே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். பின்வரிசையில் ஆல்ரவுண்டர்களான ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் அரைசதம் அடித்து இருந்தாலும் மிடில் ஆர்டரில் எந்த ஒரு வீரரும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. இதுவே இந்திய அணியின் தற்போதைய ஒரு குறைபாடாக பார்க்கப்படுகிறது.

Shreyas Iyer

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் காயம் காரணமாக இடம்பெறாத ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது மீண்டும் இரண்டாவது போட்டிக்கான அணியில் இணைந்துள்ளார் என்பதனால் அவர் பிளேயிங் லெவனில் இடம் பெறுவாரா? என்பதே பலரது கேள்வியாகவும் உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் நேற்று அளித்த பேட்டியில் : ஷ்ரேயாஸ் ஐயர் பிட்டாக இருந்தால் நிச்சயம் ப்ளேயிங் லெவனில் நேரடியாக இடம் பெறுவார் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

அதன்படி ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த இரண்டு நாட்களாகவே தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் நாளை இரண்டாவது போட்டிக்கான அணியில் ஒரேயொரு மாற்றமாக அவர் சூரியகுமார் யாதாவிற்கு பதிலாக ஆடும் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என்பது உறுதியாகி உள்ளது. அதன்படி நாளைய இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த கொஞ்ச நேரத்திலேயே 2 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்ட இந்திய அணி – என்ன நடந்தது?

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) கே.எஸ்.பரத், 7) ரவீந்திர ஜடேஜா, 8) அஷ்வின், 9) அக்சர் படேல், 10) முகமது ஷமி, 11) முகமது சிராஜ்.

Advertisement