109இல் வெறும் 1.. 40 ஓவரில் வெறும் 4.. எப்படி ஜெய்க்க முடியும்.. இந்தியாவுக்கு தோல்விக்கான 5 காரணங்கள்

India Lose.jpeg
Advertisement

ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் ஃபைனலில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோகித் சர்மா 47, விராட் கோலி 54, ராகுல் 66 ரன்கள் எடுத்த உதவியுடன் 240 ரன்கள் மட்டுமே எடுத்து ஆரம்பத்திலேயே வெற்றியை நழுவ விட்டது.

ஏனெனில் அதை சேசிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 137, லபுஸ்ஷேன் 58* ரன்கள் எடுத்து 43 ஓவரிலேயே மிகவும் எளிதான வெற்றி பெற்று கொடுத்தனர். அதனால் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை சொந்த மண்ணில் நிறுத்தி 2011 போல கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை இந்தியா கோட்டை விட்டது ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

- Advertisement -

இந்த தோல்விக்கு அஸ்வினை தேர்ந்தெடுக்காதது வெளிப்புற காரணமாக அமைந்தாலும் களத்தில் இந்தியாவின் சொதப்பலான செயல்பாடுகள் முக்கிய காரணமாக அமைந்ததை பற்றி பார்ப்போம்:
1. 109இல் 1: ரோகித் சர்மா அதிரடியான துவக்கத்தை கொடுத்த போதிலும் கில், ஸ்ரேயாஸ் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தியதால் நிதானத்தை காட்டுவதற்காக மெதுவாக பேட்டிங் செய்த விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் ஒரு கட்டத்திற்கு பின் அதிரடியாக விளையாடாமல் நிதானமாகவே விளையாடினார்கள்.

குறிப்பாக 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்த ஜோடி அதற்காக 109 பந்துகளை எதிர்கொண்டது. அதை விட அந்த 109 பந்துகளில் இந்த ஜோடி வெறும் 1 பவுண்டரி மட்டுமே அடித்தது தோல்விக்கு முக்கிய காரணமானது.

- Advertisement -

2. 40 ஓவரில் 4: ரோகித் சர்மா மட்டும் இப்போட்டியில் அதிரடியாக 7 பவுண்டரிகள் அடித்த நிலையில் எஞ்சிய 9 பேட்ஸ்மேன்கள் சேர்ந்து வெறும் 9 பவுண்டரிகள் மட்டுமே அடித்தது தோல்விக்கு மற்றுமொரு காரணமானது. குறிப்பாக முதல் 10 ஓவருக்கு பின் இந்திய வீரர்கள் வெறும் 4 பவுண்டரிகள் மட்டுமே அடித்தனர். இப்படி பவர்பிளே முடிந்தபின் கடைசி 40 ஓவரில் வெறும் 4 பவுண்டரிகள் மட்டும் அடிப்பது 2005க்குப்பின் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவே முதல் முறையாகும்.

3. சொதப்பல் சூர்யா: நன்கு செட்டிலான ராகுல் முக்கிய நேரத்தில் அவுட்டான போது சிறப்பாக விளையாட வேண்டிய சூரியகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளுக்கு நான் செட்டாக மாட்டேன் என்பதை காண்பிக்கும் வகையில் மோசமாக செயல்பட்டார். அதனால் கடைசி 37 ரன்களுக்கு இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து சிறப்பாக ஃபினிஷிங் செய்ய முடியாமல் போனது தோல்வியை கொடுத்தது.

- Advertisement -

4. மிடில் ஓவர்: இத்தொடர் முழுவதும் மிரட்டிய இந்திய பவுலர்கள் இப்போட்டியில் 10 – 40 வரையிலான மிடில் ஓவர்களில் ஹெட் – லபுஸ்ஷேன் போன்றவர்களின் ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் ஏமாற்றத்தை கொடுத்தது இந்தியர்களுக்கு ஏமாற்ற தோல்வியை பரிசளித்தது.

இதையும் படிங்க: உங்க பேட்டிங் ரொம்ப ஒர்ஸ்ட். ஒன்டே மேட்ச்க்கு நீங்க செட்டாக மாட்டீங்க – அதிரடி வீரரை விளாசும் ரசிகர்கள்

5. ஓப்பனிங் பவுலிங்: இறுதியில் 240 ரன்களை துரத்தும் போது வார்னர் – மார்ஷ் – ஹெட் ஆகியோர் சேர்ந்து ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடியதால் 41 ரன்களை 5 ஓவர்களுக்குள் எடுத்தது ஆஸ்திரேலியாலின் வெற்றிக்கு வித்திட்டது. அந்தளவுக்கு இந்தியாவின் ஓப்பனிங் பவுலிங் துல்லியமாக இல்லை.

Advertisement