
இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை இன்று அறிவித்தது. ரோகித் சர்மா தலைமையிலான இந்த அணியில் 16 வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே அணிதான் அடுத்ததாக நடைபெற இருக்கும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடருக்காகவும் தேர்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இந்திய அணியின் இந்த அணித்தேர்வு அனைவரது மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி கட்டப் போட்டிகள் நடைபெற்று வரும் வேளையில் இந்திய அணி தங்களது கடைசி 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்த 10 டெஸ்ட் போட்டிகளில் 5,6 வெற்றிகளை பெற்றால் கூட இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷித் தொடரின் இறுதிப் போட்டிக்கு சென்று விடும். இதன் காரணமாக இனிவரும் தொடர்கள் அனைத்தும் இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடர்களாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் 16 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டாலும் அதில் 5 வீரர்களுக்கு நிச்சயம் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என்றும் அவர்கள் இந்த தொடர் முழுவதுமே பெஞ்சில் அமரப் போகிறார்கள் என்று தெரிகிறது.
அந்த வகையில் இந்த வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் துவக்க வீரர்களாவும், மூன்றாவது வீரராக சுப்மன் கில்லும், நான்காவது வீரராக விராட் கோலியும் விளையாடுவார்கள். அதே போன்று ஐந்து மற்றும் ஆறு இடங்களில் கே.எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் விளையாடுவது உறுதி.
இதையும் படிங்க : வெறும் 3 போட்டியுடன் ஓரங்கட்டப்பட்ட ஆர்.சி.பி வீரர்.. இனி டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க வாய்ப்பில்லை – விவரம் இதோ
சுழற்பந்து வீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், அக்சர் பட்டேல் ஆகியோரும் விளையாடுவார்கள். வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா மற்றும் சிராஜ் விளையாடுவார்கள். இதன் காரணமாக மீதமுள்ள யாஷ் தயாள், ஆகாஷ் தீப், துருவ் ஜுரேல், சர்பராஸ் கான் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இந்தத் தொடருக்கான இந்திய அணியில் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்பது உறுதி.