வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற உள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அதிகாரவபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த இந்திய அணியில் ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதோடு நட்சத்திர வீரர்கள் பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் இந்த வீரர்கள் தேர்வு பலமாக இருப்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ஆர்.சி.பி வீரர் :
காயத்திலிருந்து இன்னும் முழு உடற்தகுதி பெறாத முகமது ஷமி வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக மீண்டும் ஆகாஷ் தீப்பிற்கு இடம் கிடைத்துள்ளது. அதேபோன்று யாஷ் தயாளுக்கும் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வங்கதேச அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் மிடில் ஆர்டரில் ரஜத் பட்டிதாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கடைசியாக இந்திய அணி பங்கேற்று விளையாடிய இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது நட்சத்திர வீரர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக மிடில் ஆடரில் ரஜத் பட்டிதார் இடம் பிடித்திருந்தார்.
ஆனாலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகளில் விளையாடிய அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 63 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இதன் காரணமாக அவருக்கு பதிலாக சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட சர்பராஸ் கான் ஐந்து இன்னிங்ஸ்களில் மூன்று அரைசதங்களுடன் 200 ரன்கள் அடித்து அசத்தினார். அதன் காரணமாக தற்போது வங்கதேச அணிக்கு எதிரான இந்த தொடரில் ரஜத் பட்டிதார் கழட்டி விடப்பட்டு மிடில் ஆர்டரில் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்றால் சந்தேகம் தான்.
இதையும் படிங்க : வெறும் 125 ரன்ஸ்.. இங்கிலாந்துக்கு பஸ்பால் ஆட்டத்தை காண்பிக்கும் இலங்கை.. 4வது நாள் சவாலில் வெல்லப்போவது யார்?
இருந்தாலும் அவர் இந்திய டெஸ்ட் அணியுடன் தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் 31 வயதான ரஜத் பட்டிதார் இந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அவர் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்பே இல்லை என்று உறுதியாகி உள்ளது.



