இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இலங்கை மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் 2 போட்டிகளில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியது. அந்த நிலையில் அத்துடரின் கடைசி போட்டி செப்டம்பர் 6ஆம் தேதி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கியது.
அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 325 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஓலிப் போப் 154, பென் டக்கெட் 86 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை சார்பில் அதிகபட்சமாக மிலன் ரத்நாயகே 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
சரிந்த இங்கிலாந்து:
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை மீண்டும் இங்கிலாந்துக்கு எதிராக சுமாராக விளையாடி வெறும் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக நிஷாங்கா 64, கேப்டன் டீ சில்வா 69, கமிண்டு மெண்டிஸ் 64 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஓலி ஸ்டோன், ஜோஸ் ஹுல் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
அதன் பின் 90 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து சிறப்பாக விளையாடி 300 – 400 ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் அற்புதமாக பந்து வீசிய இலங்கை பவுலர்கள் இங்கிலாந்தை வெறும் 156 ரன்களுக்கு சுருட்டினர். அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 67, டான் லாரன்ஸ் 35 ரன்கள் எடுத்தனர்.
இலங்கையின் பஸ்பால்:
இலங்கைக்கு அதிகபட்சமாக லகிரு குமாரா 4, விஸ்வா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இறுதியில் 219 என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தும் இலங்கைக்கு கருணரத்னே 8 ரன்களில் அவுட்டானார். ஆனால் மற்றொரு துவக்க வீரர் பதும் நிசாங்கா அதிரடியாக விளையாடி ஒருநாள் கிரிக்கெட்டைப் போல வேகமாக ரன்கள் குவித்து அரை சதமடித்து 53* (43) ரன்கள் எடுத்துள்ளார்.
அதே போல அடுத்ததாக வந்த குசால் மெண்டிஸ் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி 30* (25) ரன்கள் எடுத்தார். அவர்களுடைய அதிரடியான ஆட்டத்தால் மூன்றாவது நாள் முடிவில் 94-1 ரன்கள் எடுத்துள்ள இலங்கைக்கு இன்னும் 125 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. மறுபுறம் தொடரை ஏற்கனவே கைப்பற்றிய மகிழ்ச்சியில் உள்ள இங்கிலாந்து இப்போட்டியில் 2வது இன்னிங்சில் பேட்டிங்கில் கோட்டை விட்டது.
இதையும் படிங்க: 156க்கு ஆல் அவுட்.. 26 வருடத்துக்கு பின் தெறிக்க விட்ட இலங்கைக்கு வெற்றி வாய்ப்பு.. இங்கிலாந்து மோசமான சாதனை
அதனால் 219 என்ற குறைவான இலக்கை கட்டுப்படுத்த இங்கிலாந்து முடிந்தளவுக்கு முயற்சிக்கிறது. ஆனால் இலங்கை பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி இங்கிலாந்துக்கு அணிக்கே தற்போது பஸ்பால் எனப்படும் அதிரடி ஆட்டத்தை காண்பித்த வருகின்றனர். அதனால் இப்போட்டியில் இலங்கை வெல்வதற்கே தற்சமயத்தில் பிரகாச வாய்ப்புள்ளது. குறிப்பாக நான்காவது நாளில் மழை பெய்யக்கூடிய சூழ்நிலை இருப்பதால் இங்கிலாந்தின் ஸ்விங் பந்துகள் அட்டாக்கை உடைத்து விட்டால் இலங்கை கண்டிப்பாக செல்வதற்கு வாய்ப்புள்ளது



