
இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ ஆண்டுதோறும் வீரர்களின் தகுதிக்கேற்ப சம்பள ஒப்பந்த பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது 2026-ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் 2025-26 ஆண்டிற்கான மத்திய ஊதிய ஒப்பந்த பட்டியலை 3 பிரிவுகளின் கீழ் அறிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு வரை நடப்பில் இருந்த ஏ ப்ளஸ் கிரேடு நீக்கப்பட்டு தற்போது ஏ, பி, சி ஆகிய மூன்று பிரிவுகள் மட்டுமே இருக்கின்றன.
அதில் ஏ பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 5 கோடியும், பி பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு ஆண்டிற்கு சுமார் 3 கோடியும், சி பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு ஆண்டிற்கு 1 கோடி ரூபாய் என்கிற வகையில் சம்பளம் பிரிக்கப்பட்டுள்ளது.
அப்படி வெளியான இந்த பட்டியலில் ஏ பிரிவில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் அனுபவ ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவருக்கு மட்டுமே ஏ பிரிவில் ஒப்பந்த பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏ பிளஸ் பிரிவில் இருந்த ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இரண்டு வகையான வடிவங்களில் இருந்து ஓய்வு பெற்றதால் அவர்கள் பி கிரேடுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பின்னர் தற்போது அணியில் சமீப காலமாக விளையாடி வரும் இளம் வீரர்களுக்கு சி பிரிவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 30 வீரர்களுக்கு இந்த ஒப்பந்தப் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்ட வேளையில் குறிப்பிட்ட 5 நட்சத்திர வீரர்களுக்கு இந்த ஒப்பந்த பட்டியலில் வாய்ப்பு வழங்கப்படாதது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : நமீபியா அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம் – விவரம் இதோ
அந்த வகையில் இஷான் கிஷன், முகமது ஷமி, முகேஷ் குமார், ரஜத் பட்டிதார், சர்பராஸ் கான் ஆகிய 5 பேருக்கு வாய்ப்பு கிடைக்காதது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் இந்த மத்திய ஊதிய ஒப்பந்த பட்டியலில் புது வரவாக தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சனுக்கு சி பிரிவில் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.