நமீபியா அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம் – விவரம் இதோ

IND
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது நடைபெற்று வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணியானது தங்களது முதலாவது போட்டியில் அமெரிக்கா அணி எதிர்த்து விளையாடி வெற்றி பெற்றது.

அடுத்த போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றம் :

அதனை தொடர்ந்து இந்திய அணி இந்த லீக் சுற்று போட்டிகளில் தங்களது இரண்டாவது ஆட்டத்தில் நமீபியா அணிக்கு எதிராக வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி விளையாட இருக்கிறது. இதற்காக தற்போது இந்திய அணியின் வீரர்கள் டெல்லி சென்றடைந்து அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று பலமான நிலையை அடையும் என்பது உறுதி. இந்நிலையில் இந்த இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஏதாவது மாற்றங்கள் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் அணியில் ஒரு முக்கிய மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் கடந்த அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியை காய்ச்சல் காரணமாக தவறவிட்ட இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா தவற விட்டார். ஆனால் தற்போது அவர் மீண்டும் சீரான உடல் நிலையை எட்டியுள்ளதால் நமீபியா அணிக்கு எதிரான போட்டியின் போது அவர் விளையாடுவார் என்று தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : எந்தவொரு வீரரும் நிகழ்த்தாத வரலாற்று சாதனையை நிகழ்த்தி அசத்திய ஜிம்பாப்வே வீரர் – பிரெண்டன் டெய்லர்

அதன் காரணமாக முகமது சிராஜ் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக பும்ரா வருவார் என்று கூறப்படுகிறது. டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத முகமது சிராஜ் ஹர்ஷித் ராணாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக மாற்று வீரராக இடம் பெற்று முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement