IND vs ZIM : தொடரை கைப்பற்றுமா இந்தியா – முதல் ஒருநாள் போட்டியில் நிகழ்த்தப்பட்ட 5 சாதனைகளின் தொகுப்பு இதோ

Siraj
- Advertisement -

ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. ஆகஸ்ட் 18-ஆம் தேதியான நேற்று இந்திய நேரப்படி மதியம் 12.45 மணிக்கு துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே என்னதான் சமீபத்தில் வங்கதேசத்தை தோற்கடித்து நல்ல பார்மில் இருந்தாலும் இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் 40.3 ஓவரில் வெறும் 189 ரன்களுக்கு சுருண்டது. இன்னசென்ட் கயா 4, மருமணி 8, மதவேரே 5, சீன் வில்லியம்ஸ் 1, சிகந்தர் ராசா 12, ரியன் புர்ள் 11 என முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி கைவிட்ட அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சகப்வா 35 ரன்களும், ப்ராட் எவன்ஸ் 33* ரன்களும், ங்கரவா 34 ரன்களும் எடுத்தனர்.

Deepak-Chahar

- Advertisement -

இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக தீபக் சஹர், அக்சர் பட்டேல் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அதை தொடர்ந்து 190 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சுமாராக பந்துவீசிய ஜிம்பாப்வே பவுலர்களை திறம்பட எதிர்கொண்டு ஆரம்பம் முதலே நிதானமாகவும் தேவையானயளவு அதிரடியாக ரன்களை சேர்த்தனர்.

தொடரை வெல்லுமா:
நேரம் செல்ல செல்ல நங்கூரமாக பேட்டிங் செய்த இவர்கள் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அரைசதம் கடந்து ஜிம்பாப்வேவுக்கு சிம்ம சொப்பனமாக மாறி கடைசி வரை அவுட்டாகாமல் 30.5 ஓவரிலேயே 192/0 ரன்களை எட்ட வைத்து இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற வைத்தனர். இதில் ஒருபுறம் நிதானத்தை காட்டிய அனுபவ வீரர் ஷிகர் தவான் 9 பவுண்டரியுடன் 81* (113) ரன்களும் மறுபுறம் அதிரடி காட்டிய சுப்மன் கில் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 82* (72) ரன்களும் குவித்தார்.

இந்த வெற்றிக்கு காயத்திலிருந்து திரும்பி 3 விக்கெட்டுகளை எடுத்து அபாரமாக பந்துவீசிய தீபக் சாஹர் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். இதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள இந்தியா ஆகஸ்ட் 20-ஆம் தேதியான நாளை நடைபெறும் 2வது போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்ற தயாராகியுள்ளது.

- Advertisement -

5 சாதனைகள்:
இந்த போட்டியில் இந்தியாவும் இந்திய வீரர்களும் நிகழ்த்திய சில முக்கிய சாதனைகளைப் ஒரே தொகுப்பாக பார்ப்போம்:
1. இப்போட்டியில் 190 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சிந்தாமல் சிதறாமல் அற்புதமாக பேட்டிங் செய்த ஷிகர் தவான் – கில் ஆகியோர் அபாரமான ஒப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். 192 ரன்களை குவித்த அவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே மண்ணில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடியாக சாதனை படைத்தனர். அந்த பட்டியல்:
1. ஷிகர் தவான் – சுப்மன் கில் : 192*, 2022*
2. சச்சின் டெண்டுல்கர் – ராகுல் டிராவிட் : 180, 1998

Shubman Gill

2. அதைவிட ஒருநாள் கிரிக்கெட்டில் விக்கெட்டை இழக்காமல் அதிக ஓவர்கள் பேட்டிங் செய்த இந்திய ஜோடி என்ற புதிய வரலாற்றையும் படைத்துள்ளனர். அந்த பட்டியல்:
1. ஷிகர் தவான் – சுப்மன் கில் : 30.5 ஓவர்கள், ஜிம்பாப்வேக்கு எதிராக, 2022
2. சசின் டெண்டுள்கர் – சௌரவ் கங்குலி : 30.0 ஓவர்கள், ஜிம்பாப்வேக்கு எதிராக, 1998

- Advertisement -

3. மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் விக்கெட்டை இழக்காமல் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக துரத்திய 2வது இந்திய ஜோடி என்ற பெருமையையும் அவர்கள் பெற்றனர். அந்தப் பட்டியல்:
1. சசின் டெண்டுள்கர் – சௌரவ் கங்குலி : 197, ஜிம்பாப்வேக்கு எதிராக, ஷார்ஜா,1998
2. ஷிகர் தவான் – கில் : 190, ஜிம்பாப்வேக்கு எதிராக, ஹராரே, 2022*

Deepak Chahar 1

4. வரலாற்றில் முதல் முறையாக இந்த வருடம் தான் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு கேலண்டரில் இந்தியா 2 முறை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியுள்ளது. கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் போட்டியிலும் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

5. மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்து இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. ஜிம்பாப்வேக்கு எதிராக : 13*, (2013 – 2022*)
2. வங்கதேசத்துக்கு எதிராக: 12 (1988 – 2004)
3. நியூசிலாந்துக்கு எதிராக : 11 (1986 – 1988)

INDvsZIM

6. கடந்த ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் முறையாக கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல் 4 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக இப்போட்டியில் வெற்றியை பதிவு செய்த நிம்மதி அடைந்துள்ளார். ஆச்சர்யப்படும் வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 2016இல் இதே ஜிம்பாப்வேக்கு எதிராக அறிமுகமான அவர் முதல் போட்டியிலேயே சதமடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மகத்தான எம்எஸ் தோனியால் தொட முடியாமல் போன தரமான ரிக்கி பாண்டிங்கின் 3 சாதனைகளின் பட்டியல்

7. இப்போட்டியில் 81* ரன்கள் குவித்த ஷிகர் தவான் ஒருநாள் கிரிக்கெட்டில் 6500 ரன்கள் குவித்த 5வது இந்திய தொடக்க வீரர் என்ற பெருமையை பெற்றார்

Advertisement