2022ஆம் ஆண்டில் இந்திய அணியிலிருந்து மறைந்து வெகு தூரம் சென்ற 5 கிரிக்கெட் வீரர்கள் – லிஸ்ட் இதோ

Nattu-4
- Advertisement -

2023 ஆங்கில புத்தாண்டை ஒட்டுமொத்த உலகமும் கோலகாலமாக வரவேற்கும் நிலையில் 2022ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் நிறைய மறக்க முடியாத நினைவுகளும் தருணங்களும் அமைந்தன. அதே போல் சில கிரிக்கெட் வீரர்கள் அபாரமாக செயல்பட்டு உலக சாதனைகளை படைத்து தங்களது நாட்டுக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்து நிரந்தர இடத்தையும் பிடித்தார்கள். இருப்பினும் சில வீரர்கள் கிடைத்த வாய்ப்பில் சுமாராக செயல்பட்டதுடன் அதிர்ஷ்டமின்மையால் அணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி தற்போது வெகு தூரத்தில் நிற்கிறார்கள்

குறிப்பாக சிறப்பாக செயல்பட்டாலே மும்மடங்கு போட்டி நிறைந்த இந்திய அணியில் சில வீரர்கள் சுமாராக செயல்பட்டதாலும் சில வீரர்கள் காயத்திற்கு பின் வாய்ப்பு பெறாமலும் வெகு தூரம் சென்று விட்டார்கள். அதாவது தற்சமயத்தில் அவர்கள் இந்தியாவுக்காக விளையாடும் உத்தேச அணியில் கூட இல்லை. அவர்களைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. வெங்கடேஷ் ஐயர்: 2021இல் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் பகுதியில் திண்டாடிய கொல்கத்தா துபாயில் நடைபெற்ற 2வது பகுதியில் அபாரமாக செயல்பட்டு பைனல் வரை செல்வதற்கு ஆல் ரவுண்டராக அசத்திய இவர் 2022 ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் நடந்த ஒருநாள் தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

அந்த சமயத்தில் ஹர்திக் பாண்டியா பார்மின்றி தடுமாறியதால் அவரது இடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் சுமாராக செயல்பட்ட நிலையில் 6 டி20 போட்டிகளில் 97 ரன்களை 179.63 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தார். ஆனால் 2022 ஐபிஎல் தொடரில் இவர் மோசமாக செயல்பட்ட நிலையில் கேப்டனாகவும் ஆல்-ரவுண்டராகவும் அசத்தி கோப்பையை வென்ற பாண்டியா மீண்டும் கம்பேக் கொடுத்தார். அதனால் வாய்ப்பிழந்த இவர் தற்போது இந்திய அணியிலிருந்து வெகு தூரத்தில் உள்ளார்.

- Advertisement -

4. சேட்டன் சகாரியா: இடது கை வேகப்பந்து வீச்சாளராக 2021 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் அசத்திய அவர் ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு பெற்றார்.

குறிப்பாக அறிமுக ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுகளை எடுத்த அவர் 2 டி20 போட்டிகளில் 1 விக்கெட் எடுத்த நிலையில் மேற்கொண்டு வாய்ப்பை பெறுவதற்கு அசத்த வேண்டிய 2022 ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்டார். இருப்பினும் இளம் வீரரான இவர் விரைவில் கம்பேக் கொடுப்பார் என்று நம்பலாம்.

- Advertisement -

3. சந்தீப் வாரியார்: 2021 ஐபிஎல் தொடரில் அசத்திய இவரும் ஜூலை மாதம் நிகழ்ந்த இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்தியாவுக்காக அறிமுகமானார். ஆனால் அதுவே அவருடைய கடைசி போட்டியாக அமைந்தது.

ஏனெனில் அதன் பின் முதன்மை பவுலர்கள் வந்து விட்டதாலும் ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டதாலும் கழற்றி விடப்பட்ட அவரை சமீபத்திய ஐபிஎல் ஏலத்திலும் எந்த அணியும் வாங்கவில்லை.

- Advertisement -

2. ராகுல் சஹர்: 2021 ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் அசத்தியதால் இந்தியாவுக்காக அறிமுகமாகி ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்த இவருக்கு நேரடியாக 2021 டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக முதன்மை ஸ்பின்னர் சஹால் அந்த சமயத்தில் பார்மின்றி தவித்ததால் உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்பட்ட இவர் கிடைத்த 1 போட்டியில் சுமாராக செயல்பட்டதால் அதுவே இந்தியாவுக்காக விளையாடிய கடைசி போட்டியாக அமைந்தது.

ஏனெனில் அதன் பின் நடைபெற்ற 2022 ஐபிஎல் சுமாராக செயல்பட்ட இவரது இடத்திற்கு ஊதா தொப்பியை வென்று பார்முக்கு திரும்பிய சஹால் மீண்டும் வந்து விட்டார். அதனால் 2022இல் இந்தியாவுக்காக 1 போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு பெறாத அவர் மீண்டும் கம்பேக் கொடுக்க முயற்சித்து வருகிறார்.

1. நடராஜன்: தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர் டிஎன்பிஎல் தொடரில் அசத்தி ஐபிஎல் தொடரிலும் அபாரமாக செயல்பட்டதால் 2020 டிசம்பரில் நடந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்டார். அதிர்ஷ்டவசமாக முதன்மை பவுலர்கள் காயமடைந்து வெளியேறியதால் அந்த சுற்றுப்பயணத்தில் நிகழ்ந்த ஒருநாள் மற்றும் டி20 தொடரில் வாய்ப்பு பெற்று அசத்திய அவர் பின்னர் நடந்த டெஸ்ட் தொடரிலும் மறக்க முடியாத காபா போட்டியில் அறிமுகமாகி 3 விக்கெட்டுகளை எடுத்து வரலாற்று வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

ஆனால் துரதிஷ்டவசமாக அதன்பின் காயமடைந்து வெளியேறிய அவர் மீண்டும் 2022 ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். ஆனாலும் நிறைய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்த இந்திய நிர்வாகம் அவருக்கு மறுவாய்ப்பு கொடுக்காமல் புறக்கணித்து வருவது தமிழக ரசிகர்களை கொதிக்க வைத்துள்ளது.

இதையும் படிங்க: பயிற்சியாளரா நீங்க எதுக்கு இருக்கீங்க? இளம் வீரரை தேர்வு செய்யாததால் ராகுல் டிராவிட்டை விளாசும் கம்பீர் – நடந்தது என்ன

அதனால் 2022இல் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு பெறாத அவர் இப்பட்டியில் மேலே இருப்பவர்களை காட்டிலும் மறைமுக அரசியல் காரணமாக இந்திய அணியிலிருந்து வெகு தொலைவில் உள்ளார் என்பதே தமிழக ரசிகர்களின் பிரதிபலிப்பாக உள்ளது.

Advertisement