IND vs ZIM : ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Yuzvendra-Chahal
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றிய வேளையில் அடுத்ததாக தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடர் முடிவடைந்த பின்னர் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் இருந்து ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

INDvsZIM

- Advertisement -

இந்த ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை நேற்று பி.சி.சி.ஐ தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டது. இந்த ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சீனியர் வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களை கொண்ட அணியே இந்த ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது.

ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் மற்றும் ஹார்டிக் பாண்டியா போன்ற முன்னணி சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தற்போது நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்ற ஐந்து வீரர்களை ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இருந்து இந்திய அணி நிர்வாகம் கழட்டி விட்டுள்ளது. அவர்கள் கழட்டி விடப்பட்டதற்கு எந்த காரணமும் இல்லை என்றாலும் வீரர்கள் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருவதால் சுழற்சி முறையில் அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதன் காரணமாகவே அவர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Shardul-Thakur

அதனை தவிர்த்து அனைவருமே மிகச் சிறப்பான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒருநாள் தொடரில் இடம் பிடித்து விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய ஐந்து வீரர்களை ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இருந்து இந்திய நிர்வாகம் கழட்டி விட்டுள்ளது.

- Advertisement -

தொடர்ச்சியாக பல்வேறு தொடர்களில் கலந்து கொண்டு விளையாடி வரும் இந்திய அணியின் வீரர்களின் பனிச்சுமையை கருத்தில் கொண்டும், அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்கிற காரணத்தினாலும் சுழற்சி முறையில் சூழ்நிலையை கணக்கில் கொண்டு இந்திய அணி வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறது.

இதையும் படிங்க : IND vs ZIM : 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – 15 பேர் கொண்ட லிஸ்ட் இதோ

மேலும் இந்த தொடருக்கான இந்திய அணியில் சமீப காலமாக காயத்தால் அவதிப்பட்டு வந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் சி.எஸ்.கே வீரர் தீபக் சாஹர் ஆகியோரும் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement