IND vs WI : முதன்முறையாக வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 5 வீரர்கள் – யார் யார் தெரியுமா?

IND
- Advertisement -

இங்கிலாந்தில் கடந்த மாதம் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது அடுத்ததாக தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் என மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது.

IND-vs-WI

- Advertisement -

இந்த சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் ஏற்கனவே இந்திய அணியின் கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்ட வேளையில் தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சென்றடைந்துள்ளது.

எதிர்வரும் ஜூலை 12-ஆம் தேதி துவங்க இருக்கும் இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நாளை ஜூலை 6-ஆம் தேதி இரண்டு நாள் கொண்ட பயிற்சி ஆட்டத்திலும் இந்திய அணி பங்கேற்க இருக்கிறது.

Ishan Kishan and Gill

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் புஜாரா, உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் இடம்பெறாத வேளையில் அவர்களுக்கு பதிலாக ருதுராஜ் ஜெய்க்வாட், ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், நவ்தீப் சைனி, ஜெயதேவ் உனட்கட் போன்ற வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அளவில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என்பது நாளைய பயிற்சி போட்டியில் தெரிந்துவிடும். ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியின் போது இந்திய அணி முறையான பயிற்சி இல்லாததாலே தோல்வியை சந்தித்தது என்று பரவலாக பேசப்பட்டது.

இதையும் படிங்க : ஒருவேளை ஓய்விலிந்து கம்பேக் கொடுத்தா அந்த 2 இந்திய பேட்ஸ்மேன்களுடன் போட்டியிடுவேன் – ஏபிடி மனம் திறந்த பேட்டி

இவ்வேளையில் தற்போது இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக இந்திய அணி பயிற்சி போட்டியில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள 5 வீரர்களான சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார், யாஷஸ்வி ஜெயஸ்வால், இஷான் கிஷன் மீது அனைவரது பார்வையும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement