ஒருவேளை ஓய்விலிந்து கம்பேக் கொடுத்தா அந்த 2 இந்திய பேட்ஸ்மேன்களுடன் போட்டியிடுவேன் – ஏபிடி மனம் திறந்த பேட்டி

ABD
- Advertisement -

நட்சத்திரம் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் உலக அளவில் முக்கியமான பேட்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். ஏனெனில் 2004இல் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் சுமாராகவே செயல்பட்டாலும் நாளடைவில் தன்னுடைய அனுபவத்தால் அசத்த துவங்கிய அவர் டி20 கிரிக்கெட்டில் எப்படி பந்து வீசினாலும் உருண்டு புரண்டு நினைத்து கூட பார்க்க முடியாத வித்தியாசமான சாட்டுகளால் சிக்ஸர்களை பறக்க விட்டு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தினார் என்று சொல்லலாம். அதனால் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அனைவராலும் கொண்டாடப்பட்ட அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக அரை சதம், சதம், 150 ரன்கள் அடித்த வீரராக 3 உலக சாதனைகளை படைத்துள்ளார்.

Abd

- Advertisement -

அதே போல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் 2012இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 220 பந்துகளில் 33 ரன்களை எடுத்தது போன்ற மெதுவான பேட்டிங்கை வெளிப்படுத்தும் தன்மையை கொண்ட அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டு 19000க்கும் மேற்பட்ட ரன்களையும் 47 சதங்களையும் அடித்து தென்னாபிரிக்காவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரிலும் பெங்களூரு அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடி இந்திய ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள அவர் கடந்த 2019 உலகக் கோப்பைக்கு முன்பாக 34 வயதிலேயே ஓய்வு பெற்றது அனைவருக்கும் ஏமாற்றமாக அமைந்தது.

போட்டியிட விரும்புகிறேன்:
அப்போது 2021 டி20 உலகக்கோப்பையில் ஓய்விலிருந்து வெளியே வந்து விளையாட உள்ளார் என்று செய்திகள் வெளியான போதிலும் அதை மறுத்த ஏபி டீ வில்லியர்ஸ் ஐபிஎல் 2023 தொடரில் வர்ணையாளராக செயல்பட்டார். இந்நிலையில் ஓய்விலிருந்து வெளிவந்து மீண்டும் தம்மால் விளையாட முடியும் என்றாலும் அந்த பழைய பவர் இருக்காது என்பதால் மீண்டும் விளையாடப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கேரியரின் கடைசி காலத்தில் முன்கூட்டியே ஓய்வு பெற்ற தமது காலத்தில் இப்போதுள்ள இம்பேக்ட் விதிமுறை இருந்திருந்தாலும் அதை பயன்படுத்தி மேற்கொண்டு விளையாடியிருக்க மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார். அதை விட ஒருவேளை ஓய்விலிருந்து வெளியே வந்தால் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகிய இந்திய வீரர்களுடன் போட்டியிட விரும்புவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நிச்சயமாக இப்போதும் என்னால் விளையாட முடியும். ஆனால் அந்த பழைய டிரைவ் இனிமேலும் என்னிடம் இருக்காது. எனவே எப்போதும் நாம் நாமாக இருப்பதே சிறந்ததாகும். அதனால் சிறப்பாகவே இருக்க விரும்பும் நான் ஒருவேளை கம்பேக் கொடுத்தால் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோருடன் போட்டியிட விரும்புகிறேன். மேலும் என்னுடைய கேரியரின் கடைசி பகுதியில் நான் அதிகமாக விளையாடவில்லை என்பது உண்மை தான். அத்துடன் தற்போது அனைவரும் கொண்டாடும் இம்பேக்ட் விதிமுறை நிறைய வீரர்களின் கேரியரை நீட்டிக்க உதவுகிறது என்பதை நான் அறிவேன்”

ABD

“ஆனால் நான் அதை நிச்சயமாக செய்திருக்க மாட்டேன். ஏனெனில் நான் ஒரு வருடத்தில் 2 அல்லது 3 மாதங்கள் மட்டும் விளையாட விரும்பவில்லை. மாறாக உலகின் சிறந்த வீரராக விளையாட விரும்புகிறேன். இருப்பினும் அதை வருடத்தில் 2 அல்லது 3 மாதங்கள் மட்டும் விளையாடினால் உங்களால் செய்ய முடியாது. குறிப்பாக உங்களால் 9 மாதங்கள் பயிற்சி எடுத்து 3 மாதங்கள் சிறப்பாக விளையாட முடியும். ஆனால் பாதியில் வந்து பயிற்சி எடுத்து விளையாடுவதை தொடர்ந்து விளையாடுவதுடன் ஒப்பிட முடியாது”

இதையும் படிங்க:உழைப்பின் பயனாக சாய் சுதர்சனுக்கு அடித்த ஜாக்பாட், இந்திய அணியில் வழங்கப்பட்ட வாய்ப்பு – எந்த தொடரில் தெரியுமா?

“அப்படியென்றால் அந்த ஃபயர் நிமிடங்களில் அணைந்து விடும். அப்போது நான் என்ன செய்கிறேன்? ஏன் இப்படி நடக்கிறது? என்பது போன்ற குழப்பங்கள் ஏற்படும். எனவே அங்கும் இங்கும் களமிறங்கி என்னால் சில சிறந்த இன்னிங்ஸ் விளையாட முடியும் என்றாலும் நான் அதை செய்ய விரும்பவில்லை. ஏனெனில் நான் எப்போதும் உலகின் சிறந்தவனாக இருக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement