பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரலாற்றில் நிகழ்ந்த 5 மறக்க முடியாத சர்ச்சை நிகழ்வுகள்

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரும் பிப்ரவரி 9 முதல் துவங்குகிறது. அதில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இந்தியாவும் ஏற்கனவே ஃபைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்டதால் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்க்க ஆஸ்திரேலியாவும் களமிறங்குகிறது. முன்னதாக கடந்த 20 வருடங்களாக நடைபெற்று வரும் இந்த தொடரில் அவ்வப்போது நிறைய சர்ச்சையான நிகழ்வுகளும் அரங்கேறின. அதைப்பற்றி பார்ப்போம்:

5. மோசமான ரசிகர்கள்: 2020/21 தொடரில் சிட்னியில் நடைபெற்ற போட்டியில் பும்ரா மற்றும் தம்மை சில ஆஸ்திரேலிய ரசிகர்கள் இனவெறி கிண்டலடித்ததாக முகமது சிராஜ் கேப்டன் ரகானேவிடம் புகாரளித்தார். அதை அவர் நேரடியாக நடுவரிடம் தெரிவித்ததை தொடர்ந்து குறிப்பிட்ட சில ரசிகர்கள் சிட்னி மைதானத்திலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டனர்.

- Advertisement -

அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அந்த சமயத்தில் அதை காரணமாக வைத்து களத்திலிருந்து வெளியேற இந்திய அணிக்கு நடுவர் அனுமதி கொடுத்ததாகவும் ஆனால் அதை மறுத்த ரகானே தொடர்ந்து விளையாடியதாகவும் இறுதியில் சிராஜ் தெரிவித்திருந்தார்.

4. கோபமான கோலி: கடந்த 2017இல் இந்திய மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் ஒரு போட்டியில் எல்பிடபிள்யு முறையில் அவுட்டான ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அதில் எழுந்த சந்தேகத்தை தீர்ப்பதற்காக பெவிலியனில் இருந்த பயிற்சியாளர்களின் உதவியை நாடினார். ஆனால் எதிர்ப்புறம் இருக்கும் சக வீரரிடம் மட்டுமே உதவி கேட்க வேண்டும் என்பது அடிப்படை விதிமுறை என்ற நிலைமையில் அவ்வாறு நடந்து கொண்ட ஸ்டீவ் ஸ்மித்தை பார்த்து கோபமடைந்த இந்திய கேப்டன் விராட் கோலி நடுவரிடம் புகார் கொடுத்தார்.

- Advertisement -

அதை தொடர்ந்து அவ்வாறு செய்வதை தடுத்த நடுவரும் ஸ்மித்தை எச்சரிக்கை செய்து பெவிலியன் அனுப்பி வைத்தார். இறுதியில் மறந்து அப்படி ஒரு செயலை செய்து விட்டதாக அழகாக பேசிய ஸ்டீவ் ஸ்மித் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

3. சீப்பான ஸ்மித்: கடந்த 2020 – 21இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இத்தொடரின் ஒரு போட்டியில் இந்திய வீரர் ரிசப் பண்ட் அதிரடியாக ரன்களை சேர்த்து ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்தார். அப்போது ஓவர் இடைவெளியின் போது ரிஷப் பண்ட் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தபோது அந்த வழியாக நடந்து செல்வது போல் வந்த ஸ்டீவ் ஸ்மித் அவருடைய பேட்டிங் கார்ட்டை தனது கலால் தேய்த்து அழித்து விட்டு சென்றார்.

- Advertisement -

ஸ்டம்ப் கேமராவில் சிக்கிய அந்த செயல் இந்திய ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் வெளிப்படையாகவே தனது ட்விட்டரில் விமர்சித்திருந்தார். அதைத்தொடர்ந்து அதே தொடரின் மற்றொரு போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் செய்த போது ரோஹித் சர்மா அவரைப் போலவே பேட்டிங் செய்வது போல சைகை செய்து கலாய்த்தார்.

2. அதிரடி தடை: இந்திய மண்ணில் நடைபெற்ற 2012 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் 4 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தோற்றது. அதில் முதலிரண்டு போட்டிகளில் தோற்றதால் அதிருப்தியடைந்த பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் எஞ்சிய போட்டிகளில் தாம் விரும்பும் 3 முக்கிய விஷயங்களை அனைவரும் செய்வதற்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கண்டிப்புடன் தெரிவித்தார்.

- Advertisement -

அதற்கு மிட்சேல் ஜான்சன், ஷேன் வாட்சன், உஸ்மான் கவாஜா, ஜேம்ஸ் பட்டின்சன் ஆகிய 4 வீரர்களை தவிர்த்து எஞ்சிய ஆஸ்திரேலிய வீரர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதனால் பயிற்சியாளர்களின் பேச்சைக் கேட்ககாததால் அந்த 4 வீரர்கள் தடை செய்யப்பட்டு நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ஷேன் வாட்சன் மட்டும் கடைசி போட்டியில் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பி கேப்டனாக செயல்பட்டார். இருப்பினும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய அந்த நிகழ்வுக்குப் பின் மிக்கி ஆர்த்தர் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

1. மங்கிகேட்: இதைப் பற்றி பெரும்பாலான ரசிகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை என்றாலும் கடந்த 2008இல் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் தொடரின் ஒரு போட்டியில் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தம்மை குரங்கு என்று அழைத்ததாக ஆஸ்திரேலிய வீரர் அண்ட்ரூ சைமன்ஸ் புகார் எழுப்பினார். அதை விசாரித்த நடுவர் 6 – 7 ஆஸ்திரேலிய வீரர்களின் சாட்சியை அடிப்படையாக வைத்து ஹர்பஜனுக்கு 3 போட்டிகள் அதிரடியாக தடை விதித்தார்.

இதையும் படிங்க: IND vs AUS : எதிர்வரும் இந்த டெஸ்ட் தொடரை ஜெயிக்கப்போவது இந்த டீம்தான் – கிரேக் சாப்பல் கணிப்பு

ஆனால் ஹர்பஜனுக்கு ஆதரவாக நின்ற பிசிசிஐ அந்த சுற்றுப்பயணத்திலிருந்து பாதியிலேயே வெளியேறி விடுவோம் என்ற அச்சுறுத்தலை கொடுத்ததால் தடை நீக்கப்பட்டு பின்னர் எஞ்சிய போட்டிகளும் முழுமையாக நடைபெற்றது. அத்துடன் அந்த சமயத்தில் அவருடன் களத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கர் ஹர்பஜனுக்கு ஆதரவான கருத்துக்கள் தெரிவித்திருந்தார். மொத்தத்தில் இந்தியா ஆஸ்திரேலியா மட்டுமல்லாது ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த நிகழ்வு மிகப்பெரிய சர்ச்சையாக இன்றும் பார்க்கப்படுகிறது.

Advertisement