IND vs AUS : எதிர்வரும் இந்த டெஸ்ட் தொடரை ஜெயிக்கப்போவது இந்த டீம்தான் – கிரேக் சாப்பல் கணிப்பு

Greg-Chappell
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இங்கு நடைபெறவுள்ள நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி நாக்பூர் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் காயம் அடைந்ததன் காரணமாக முழுவதுமாக விளையாட முடியாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

INDvsAUS

- Advertisement -

அதேபோன்று இந்திய அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவும் இன்னமும் காயத்திலிருந்து முழுவதுமாக விடுபடாததால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் அவர் விளையாடவில்லை. அதேபோன்று ஜடேஜாவும் தற்போது தான் காயத்தில் குணமடைந்துள்ளார் என்பதனால் அவரது செயல்பாடும் எவ்வாறு அமையப் போகிறது என்று தெரியவில்லை.

அதே வேளையில் மற்றொருபுறம் ஆஸ்திரேலியா அணி தங்களது முழு பலத்துடன் இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. கடந்த 2004-ஆம் ஆண்டு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி அதன் பிறகு இதுவரை வெற்றி பெறவில்லை என்பதனால் இம்முறை டெஸ்ட் தொடரில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் தயாராகி வருகிறது.

Steve Smith Virat Kohli IND vs AUS

இந்நிலையில் இந்த முறை ஆஸ்திரேலியா அணி இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : ஆஸ்திரேலிய அணி இம்முறை இந்திய அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றும்.

- Advertisement -

ஏனெனில் இந்திய அணியில் தற்போது சிறப்பாக செயல்படக்கூடிய ரிஷப் பண்ட், பும்ரா, ஜடேஜா போன்ற வீரர்கள் காயத்தினால் அவதிப்பட்டு வருகின்றனர் இது இந்திய அணிக்கு ஒரு பெரும் பின்னடைவு ஆகும். அதேபோன்று இம்முறை இந்திய அணி நிச்சயம் விராட் கோலியை தான் பெருமளவில் நம்பி இருக்கும். அதனால் எங்களது அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை வீழ்த்துவார்கள் என்று நம்பிக்கை என்னிடம் இருக்கிறது.

இதையும் படிங்க : கே.எல் ராகுலுக்கு அந்த பொறுப்பை குடுத்துட்டு சஞ்சு சாம்சனை ஆட வையுங்க – ராபின் உத்தப்பா கருத்து

இந்தியா போன்ற சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் எங்களது அணியின் பவுலர்கள் நிச்சயம் சிறப்பாக செயல்பட்டு சமாளித்து விடுவார்கள். மேலும் பேட்டிங் துறையில் ஆஸ்திரேலிய அணி தற்போது பலமாக இருப்பதால் நிச்சயம் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் அனைத்து சாத்தியமும் உள்ளது என கிரேக் சேப்பல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement