அவுட் ஆகலாம்.. அதுக்குன்னு இப்படியா? நெதர்லாந்து அணி செய்த மிகப்பெரிய தவறு – இதை மாத்திகிட்டா நல்லது

NED
- Advertisement -

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பாக நடைபெற்ற உலகக் கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய நெதர்லாந்து அணி இந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றது. அதன்படி ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள நெதர்லாந்து அணியானது தாங்கள் விளையாடிய மூன்றாவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியையும், ஆறாவது விகட்டத்தில் பங்களாதேஷ் அணியும் வீழ்த்தி இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது. வளர்ந்து வரும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் நெதர்லாந்து அணியானது இந்த இரண்டு வெற்றியை பெற்றது அவர்களுக்கு ஒரு பெருமையான விடயம் என்று கூறலாம்.

- Advertisement -

ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் அணிகளுக்கு எதிராக இவர்கள் தற்போது இரண்டு வெற்றியை பெற்றுள்ளது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. அதை தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் 8-ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், நவம்பர் 12ம் தேதி இந்திய அணிக்கு எதிராகவும் விளையாட இருக்கிறது.

இந்நிலையில் நவம்பர் 3-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணி தோல்வியை சந்தித்துள்ள வேளையில் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சில தவறுகளை செய்துள்ளார்கள் என்றும் அதனை திருத்திக் கொள்ளுமாறும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணியின் முதல் ஐந்து வீரர்களில் நான்கு பேர் ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தனர்.

- Advertisement -

நன்றாக செட்டிலாகி விளையாடிய வீரர்கள் அனைவருமே இப்படி ரன் அவுட் ஆகி வெளியேறியதாலே அந்த அணி 179 ரன்களிலேயே சுருண்டது. ஒருவேளை அப்படி ரன் அவுட் ஆகாமல் போட்டியை தொடர்ந்து அவர்கள் விளையாடி இருந்தால் நிச்சயம் அவர்கள் 250 ரன்களுக்கு மேல் அடித்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு சவாலான போட்டியை கொடுத்து இருக்க முடியும். சர்வதேச போட்டி ஒருநாள் போட்டிகளில் எப்போதுமே பெரிய பார்ட்டோஷிப் என்பது முக்கியம். அதோடு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் நம்மால் பெரிய ரன் குவிப்பை நோக்கி செல்ல முடியும்.

இதையும் படிங்க : பாபர் மாதிரி அவங்களோட ஆடிருந்தா.. விராட் கோலி எப்போவோ சச்சினை முந்திருப்பாரு.. முகமது அமீர் அதிரடி

ஆனால் இப்படி செட்டிலான வீரர்கள் ரன் அவுட் ஆவதும், பொறுமையை இழந்து மோசமான ஷாட் விளையாடி ஆட்டமிழப்பதாலும் நெதர்லாந்து அணி இந்த போட்டியில் சரிவை சந்தித்தது. இது போன்ற சில தவறுகளை அவர்கள் திருத்திக்கொண்டால் எதிர்காலத்தில் நிச்சயம் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய பெரிய அணிகளை வீழ்த்த முடியும் என்றும், அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும் என்பதுமே பலரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement