- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவங்க 4 பேரும் ஏ பிளஸ் கிரேட் ஒப்பந்தத்தில் தான் தொடர்வார்கள்.. வெளியாகவுள்ள பி.சி.சி.ஐ – ஊதிய ஒப்பந்தம்

இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ ஆண்டுதோறும் இந்திய வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்த ஊதிய பட்டியலை வெளியிடுவது வழக்கம். மொத்தம் நான்கு கிரேட் அடிப்படையில் இந்திய வீரர்களுக்கு அவர்களது திறமைக்கு ஏற்ப தகுதியின் அடிப்படையில் மூன்று வகையான போட்டிகளுக்கான சம்பளமும் நிர்ணயிக்கப்படும்.

ஏ பிளஸ் பிரிவில் இடம்பிடிக்கப்போகும் 4 வீரர்கள் :

அதில் அதிகபட்ச சம்பளமாக ஏ ப்ளஸ் பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு 10 கோடிக்கும் மேற்பட்ட பெரிய தொகை வருடாந்திர சம்பளமாக அளிக்கப்படும். கடந்த 2024-25 ஆண்டு ஊதிய ஒப்பந்த பட்டியலில் ஏ ப்ளஸ் கிரேட் பிரிவில் :

- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, அனுபவ வீரர் விராட் கோலி, நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அதிக தொகையை பெற்ற வீரர்களாக அந்த ஒப்பந்தப்பட்டியில் இடம் பிடித்திருந்தனர். தற்போது 2025-26 ஆண்டிற்கான மத்திய ஒப்பந்த ஊதிய பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போது ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளதால் இந்த ஐபிஎல் தொடரின் இடையிலோ அல்லது ஐபிஎல் தொடர் முடிந்த பிறகோ புதிய ஒப்பந்த ஊதியப்பட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது. அந்த வகையில் வெளியாக இருக்கும் புதிய பட்டியலில் : டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் தரம் குறைக்கப்படுவார்களா? அல்லது அதே சம்பளம் கொடுக்கப்படுமா? என்ற பல கேள்விகள் இருந்து வருகிறது.

- Advertisement -

அதோடு ஏ ப்ளஸ் பிரிவில் வேறு ஏதேனும் வீரர்கள் தரம் உயர்த்தப்பட்டு இணைக்கப்படுவார்களா? என்ற கேள்வியும் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு அதிக தொகை வாங்கிய அதே நால்வரும் இந்த ஆண்டும் ஏ ப்ளஸ் பிரிவில் தொடர்வார்கள் என்றும் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் வீரர்கள் பலருக்கு புதிய கான்டிராக்ட் கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ரொம்பவும் ஸ்ட்ரிக்டா இருக்காதீங்க.. பிசிசிஐக்கு எதிராக பேசிய விராட் கோலிக்கு கபில் தேவ் ஆதரவு கருத்து

அதே போன்று கடந்த ஆண்டு முதல் அதிக போட்டிகளில் விளையாடி வரும் ஒரு சில வீரர்களுக்கு கிரேடு உயர்வும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 3 வகையான கிரிக்கெட் போட்டிகளுக்குமான ஒரு ஆட்டத்தின் சம்பளம் எவ்வளவு என்கிற தொகையும் நிர்ணயம் செய்து அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -