164 ரன்ஸ்.. வரலாறு காணாத நிகழ்வு.. ஒரே போட்டியில் 3 சூப்பர் ஓவர்கள்.. பெங்களூருவுக்கு நேர்ந்த பரிதாபம்

Super Overs
- Advertisement -

கர்நாடக மாநிலத்தில் மகாராஜா கோப்பை 2024 டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ஆகஸ்ட் 23ஆம் தேதி சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 17வது லீக் போட்டியில் ஹப்லி டைகர்ஸ் மற்றும் பெங்களூரு பளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஹப்லி அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் மனிஷ் பாண்டே 31, அனீஸ்வர் கௌதம் 30, முகமது தாஹா 31 ரன்கள் எடுத்தனர். பெங்களூர் சார்பில் அதிகபட்சமாக லாவிஸ் கவுசல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

3 சூப்பர் ஓவர்கள்:

அதன் பின் 165 ரன்களை துரத்திய பெங்களூரு அணிக்கு கேப்டன் மயங் அகர்வால் அதிரடியாக விளையாடி 54 (34) ரன்கள் குவித்த நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் எதிர்ப்புறம் நிரஞ்சன் நாயக் 19, சிவகுமார் ரக்‌ஷித் 11, சுராஜ் அகுஜா 26, அனிருத்தா ஜோஷி 17 என மற்ற வீரர்கள் பெரிய ரன்களை எடுக்கத் தவறினர். அதனால் கடைசி ஓவரில் பெங்களூரு வெற்றி பெற 6 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது அந்த ஓவரில் எல்ஆர் குமார் 5 ரன்கள் மட்டும் கொடுத்து நவீன் 23, க்ராந்தி குமார் 5 ஆகிய 2 பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கினார். அதனால் 20 ஓவரில் பெங்களூரு அணியும் சரியாக 164/9 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. அதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் பெங்களூரு 10/1 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

அரிதான நிகழ்வு:

அதிகபட்சமாக அனிருத்தா ஜோஷி 8 ரன்கள் எடுத்த நிலையில் மன்வத் குமார் 1 விக்கெட் எடுத்தார். அதைத் தொடர்ந்து 11 ரன்களை துரத்திய ஹப்லி அணி 10/0 ரன்கள் மட்டுமே எடுத்ததால் மீண்டும் போட்டி சமனில் முடிந்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 8 ரன்கள் எடுத்தார். அதன் பின் மீண்டும் நடத்தப்பட்ட 2வது சூப்பர் ஓவரில் ஹப்லி 8/0 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மீண்டும் மனிஷ் பாண்டே 7 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க: சும்மா வாய்ல சொல்லல.. 9 விக்கெட்ஸ்.. தேர்வுக்குழுவுக்கு செயலால் கோரிக்கை வைக்கும் சாய் கிசோர்

ஆனால் 9 ரன்களை துரத்திய பெங்களூரு அணி 8/1 ரன்கள் மட்டுமே எடுத்ததால் மீண்டும் போட்டி சமனில் முடிந்தது. அதனால் மீண்டும் வீசப்பட்ட 3வது சூப்பர் ஓவரில் பெங்களூரு 12/1 ரன்கள் எடுத்தது. அதை துரத்திய ஹப்லி அணிக்கு மன்வத் குமார் 12*, மனிஷ் பாண்டே 1* ரன்கள் எடுத்து ஒரு வழியாக வெற்றி பெற வைத்தனர். அந்த வகையில் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே போட்டியில் 3 சூப்பர் ஓவர் வீசப்பட்ட அரிதான நிகழ்வு இப்போட்டியில் அரங்கேறியது. ஆனால் அதிலும் பெங்களூரு பரிதாபமாக தோற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement