சும்மா வாய்ல சொல்லல.. 9 விக்கெட்ஸ்.. தேர்வுக்குழுவுக்கு செயலால் கோரிக்கை வைக்கும் சாய் கிசோர்

Sai Kishore
- Advertisement -

தமிழக இளம் கிரிக்கெட் வீரர் சாய் கிஷோர் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அதில் ஓரளவு நன்றாக செயல்படுவதால் கடந்த 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த வாய்ப்பிலும் சிறப்பாக செயல்பட்ட அவர் இந்தியா தங்கப்பதக்கம் வெல்வதற்கு தம்முடைய பங்காற்றினார்.

அதைத் தொடர்ந்து மீண்டும் இந்திய அணிக்கு விளையாடுவதற்கான வாய்ப்புக்காக அவர் காத்திருக்கிறார். அந்த நிலையில் இந்தியாவிலேயே தம்மை சிறந்த ஸ்பின்னராக உணர்வதாக சமீபத்தில் சாய் கிஷோர் தெரிவித்திருந்தார். அதனால் அடுத்ததாக நடைபெறும் வங்கதேச டெஸ்ட் தொடரில் தம்மை இந்திய அணியில் தேர்வு செய்தால் அதில் விளையாட தயாராக உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

- Advertisement -

செயலில் சாய் கிசோர்:

குறிப்பாக ரவீந்திர ஜடேஜாவுடன் பந்து வீசுவதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்த அவர் தமக்கு வாய்ப்பு கொடுக்குமாறு தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரிடம் மறைமுகமாக கேட்டுக்கொண்டார். இந்நிலையில் தமிழகத்தில் 2024 புஜ்ஜி பாபு உள்ளூர் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் எஸ்ஆர்எம் காலேஜ் மைதானத்தில் டிஎன்சிஏ 11 மற்றும் ஹரியானா அணிகள் மோதி வரும் போட்டி நடைபெற்று வருகிறது.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டிஎன்சிஏ லெவன் 393 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பாபா இந்திரஜித் சதமடித்து 167 ரன்கள் குவித்த நிலையில் ஹரியானா சார்பில் அதிகபட்சமாக நிசாந்த் சிந்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஹரியானா சாய் கிசோர் சுழலுக்கு எதிராக சுமாராக விளையாடி 218 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக தீரு சிங் 74 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

9 விக்கெட்ஸ்:

டிஎன்சிஏ லெவன் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் சாய் கிஷோர் 76 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன் பின் முன்னிலையுடன் களமிறங்கிய டிஎன்சிஏ 177-5 ரன்கள் குவித்து 2வது இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. அதிகபட்சமாக மீண்டும் பாபா இந்திரஜித் 75* ரன்கள் எடுத்தார். இறுதியில் 353 ரன்களை துரத்தும் ஹரியானா 3வது நாள் முடிவில் 16-2 எனத் தடுமாறி வருகிறது.

இதையும் படிங்க: என்னது கேஎல் ராகுல் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றாரா? கோட்டை ரோடாக்கிய வைரல் அறிவிப்பு.. உண்மை என்ன?

அந்த 2 விக்கெட்டுகளையும் எடுத்த சாய் கிசோர் மொத்தமாக இப்போட்டியில் இதுவரை 9* விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அதனால் ஹரியானாவுக்கு நாளை 337 ரன்கள் தேவைப்படும் நிலையில் அவர் இன்னும் விக்கெட்டுகளை எடுத்து அவர் தமிழக அணியை வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வாயில் மட்டும் கேட்காமல் செயலிலும் சாய் கிஷோர் தமக்கு வாய்ப்பு கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement