ஒருநாள் கிரிக்கெட்டில் நீண்ட காலம் காத்திருந்து தங்களது முதல் சதத்தை அடித்த 3 இந்திய நட்சத்திரங்களின் பட்டியல்

sachin
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது நாட்டிற்காக விளையாட வேண்டுமென்ற கனவுடன் உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக உழைத்து காத்திருந்து தேர்வாகும் நிறைய வீரர்களுக்கு அவ்வளவு எளிதாக நேரடியாக 11 பேர் அணியில் இடம் பிடித்து அறிமுகமாக விளையாடும் வாய்ப்பு கிடைக்காது. அப்படி முதல் போட்டிக்காக சில நேரங்கள் பெஞ்சில் காத்திருந்து ஒரு வழியாக அறிமுகமாகும் வீரர்களில் அனைவராலும் அறிமுக போட்டியிலேயே சந்திக்க வேண்டிய அதிகப்படியான அழுத்தத்தை சமாளித்து பெரிய அளவில் சாதிக்க முடிவதில்லை. குறிப்பாக பேட்ஸ்மேன்களாக அறிமுகமாகும் வீரர்கள் தங்களது உச்சகட்ட இலக்கான சதமடிக்க வேண்டும் என்ற லட்சியத்தை அறிமுக போட்டியிலேயே சாதித்துக் காட்டுவது மிக மிக கடினமான ஒன்றாகும்.

அதில் சில வீரர்கள் அரிதாக சதமடித்து சாதனை படைக்க தோனியை போன்ற சில வீரர்கள் டக் அவுட்டாகி தங்களது கேரியரை மோசமாக துவங்குவதும் உண்டு. ஆனாலும் திறமையான வீரர்கள் அதற்காக மனம் தளராமல் தொடர்ந்து முயற்சித்து மிக விரைவாக சதமடித்து அசத்தி விடுவார்கள். அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் பெரும்பாலான வீரர்கள் குறைந்தது 50 போட்டிகளுக்கு முன்பாகவே தங்களது முதல் சதத்தை அடித்து விடுவார்கள்.

- Advertisement -

ஆனால் சில நட்சத்திர இந்திய வீரர்கள் தங்களுடைய முதல் சதத்தை அடிப்பதற்கு அதிகப்படியான நேரங்களை எடுத்துக் கொண்டு நீண்ட காலம் காத்திருந்து கடுமையாக போராடி ஒரு வழியாக சதம் அடித்துள்ளார்கள். அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக இன்னிங்ஸ்களுக்குப் பின் சதம் அடித்த 3 இந்திய வீரர்களை பற்றி பார்ப்போம்:

3. யுவராஜ் சிங் (60): வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்தியாவின் மிகச் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் முக்கியமானவராக போற்றப்படும் இவர் ஆல்-ரவுண்டராக 2011 உலக கோப்பை போன்ற நிறைய சரித்திர வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றிய பெருமைக்குரியவர். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் 304 போட்டிகளில் 8700+ ரன்களை குவித்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 2001ஆம் ஆண்டு கென்யாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார்.

- Advertisement -

பெரும்பாலும் மிடில் ஆர்டரில் வாய்ப்பு பெற்ற அவர் அரை சதங்கள் போன்ற நல்ல ரன்களை குவித்து இளம் சூப்பர் ஸ்டாராக அவதரித்த போதிலும் முதல் சதத்தை அடிப்பதற்கு 2 வருடங்கள் காத்திருந்தார். அந்த காத்திருப்பு கடந்த 2003ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற டிவிஎஸ் கோப்பை தொடரின் ஒரு போட்டியில் 102* (85) ரன்களைக் குவித்து சதமடித்த போது முடிவுக்கு வந்தது. அந்த வகையில் 60 இன்னிங்ஸ்களுக்குப் பின் சதமடித்த அவர் அப்போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

2. சச்சின் டெண்டுல்கர் (75): 1989இல் 16 வயது பிஞ்சு கால்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி கடினமான பவுலர்களை திறமையாக எதிர்கொண்டு ஒரு வருடத்திலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்த இவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 4 வருடங்கள் சதமடிக்க முடியாமல் திண்டாடினார். ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடி ரொம்பவே தடுமாறிய அவர் கடைசி வரை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக கடந்த 1994இல் கொழும்புவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சதமடித்து 110 (130) ரன்களை விளாசினார்.

- Advertisement -

சரியாக 75 இன்னிங்ஸ் கழித்து ஒரு வழியாக சதமடித்த அவர் இந்தியாவை வெற்றி பெற வைத்து அதன் பின் ஒருநாள் கிரிக்கெட்டில் குதிரை கொம்பாக இருந்த 200 ரன்களை அடித்த முதல் பேட்ஸ்மேன், அதிக ரன்கள், அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் போன்ற ஏராளமான உலக சாதனைகளை படைத்து ஜாம்பவனாக உருவானார்.

1. சுனில் கவாஸ்கர் (100): ஹெல்மெட் இல்லாமலேயே அசுர வேக வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்களை அசால்ட்டாக எதிர்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்கள் குவித்த முதல் பேட்ஸ்மேனாக உலக சாதனை படைத்த இவர் தன்னுடைய கேரியரின் ஆரம்பத்தில் அறிமுகமான ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசி வரை தடுமாற்றமாகவே செயல்பட்டார்.

இதையும் படிங்க : IND vs RSA : 3 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

அதிலும் 1974ஆம் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 13 வருடங்கள் கழித்து 100 போட்டிகளில் விளையாடிய பின் ஒரு வழியாக கடந்த 1987இல் சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக சதமடித்து 103* (88) ரன்களை விளசினார். அந்த வகையில் அந்த போட்டியில் வெற்றி பெற உதவிய அவருடைய ஒருநாள் கேரியரில் அதுவே முதல் மற்றும் கடைசி சதமாக அமைந்தது.

Advertisement