IND vs RSA : 3 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணியானது 2 போட்டியையும் கைப்பற்றி இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அதனால் இன்றைய போட்டி தொடரின் முடிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

INDvsRSA Cup

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் இந்திய அணி விளையாடும் கடைசி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இதுவே என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றி விட்டதால் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

David Miller IND vs Sa.jpeg

அதன்படி ஏற்கனவே இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் விளையாட மாட்டார் என ரோகித் சர்மா அறிவித்துள்ளதால் ஷ்ரேயாஸ் ஐயர் இன்றைய போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது. அதேபோன்று சுழற்பந்து வீச்சாளர்களின் வரிசையில் அஷ்வினுக்கு ஓய்வளிக்கப்பட்டு யுஸ்வேந்திர சாஹலுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

- Advertisement -

மற்றபடி மேலும் சில மாற்றங்களும் இந்த போட்டிக்கான இந்திய அணியில் செய்யப்படலாம் என்று தெரிகிறது. அதன்படி இன்றைய மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : IND vs SA : இதுக்கு மேல என்ன வேணும், டி20 உ.கோ’யில் பும்ராவுக்கு பதில் அவர செலக்ட் பண்ணுங்க – ரசிகர்கள் கோரிக்கை

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) ரிஷப் பண்ட், 6) தினேஷ் கார்த்திக், 7) அக்சர் படேல், 8) ஹர்ஷல் படேல், 9) தீபக் சாகர், 10) யுஸ்வேந்திர சாஹல், 11) அர்ஷிதீப் சிங்.

Advertisement