வருங்காலங்களில் எம்எஸ் தோனி ஸ்டேண்ட் பெயர் சூட்டப்பட வாய்ப்புள்ள 3 மைதானங்கள்

Dhoni
- Advertisement -

இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர முன்னாள் வீரர் எம்எஸ் தோனி இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். கிரிக்கெட் மிகவும் பிரபலமில்லாத ராஞ்சியில் பிறந்து இன்று அந்நகரத்தின் அடையாளமாக திகழும் அளவுக்கு 3 விதமான உலக கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் விக்கெட் கீப்பிங் செய்வதிலும் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தினார். மேலும் 2010இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தரவரிசையில் இந்தியாவை நம்பர் ஒன் அணியாகவும் முன்னேற்றிய அவர் இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக மட்டுமல்லாமல் அதிரடியாகவும் விளையாட வேண்டும் என்ற தற்போதைய நிலைமை உருவாவதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர்.

அத்துடன் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட தற்போதைய இந்திய அணியில் விளையாடும் பாதிக்கும் மேற்பட்ட வீரர்களுக்கு அப்போதே சீனியர் வீரர்களை கழற்றி விட்டு அதற்காக விமர்சனங்களையும் வாங்கி கட்டிக்கொண்டு வாய்ப்பு கொடுத்து வளர்த்த அவர் வளமான வருங்காலத்திற்கும் வித்திட்ட பெருமைக்குரியவர். பொதுவாக அவரைப் போன்ற ஜாம்பவான்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக ஆற்றிய பங்கு அல்லது தங்கள் மைதானத்தை பிரபலப்படுத்தும் வகையில் செயல்பட்டால் அவர்களை பாராட்டும் வகையில் தங்களது சொந்த ஊரிலிருக்கும் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு பகுதி அதாவது ஸ்டேண்டுக்கு அவர்களுடைய பெயரை சூட்டி அம்மைதான நிர்வாகிகள் பெருமைப்படுத்துவது வழக்கமாகும்.

- Advertisement -

அந்த வகையில் இப்போதே உலக வரைபடத்தில் ராஞ்சிக்கு எடுத்துக்காட்டாக திகழும் தோனிக்கு அங்குள்ள ஜேஎஸ்சிஏ மைதானத்தில் “எம்எஸ் தோனி பெவிலியன்” என்ற பெயருடன் பாதி மைதானத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதே போல இந்தியாவில் இருக்கும் இதர சில மைதானங்களிலும் வருங்காலங்களில் தோனியின் பெயர் குறைந்தபட்சம் ஒரு பகுதிக்கு சூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவைகளைப் பற்றி பார்ப்போம்:

1. சேப்பாக்கம் மைதானம்: இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனி 4 கோப்பைகளை வென்று கொடுத்து சென்னையை 2வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக ஜொலிக்க முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறார். அதனால் தமிழக ரசிகர்கள் அவரை நெஞ்சங்களில் வைத்து தல என்று கொண்டாடி வருகிறார்கள்.

- Advertisement -

அவர்கள் மீது இருக்கும் பாசத்தால் ராஞ்சிக்கு அடுத்து சென்னை தான் தன்னுடைய 2வது வீடு என்று ஏற்கனவே தெரிவித்துள்ள தோனி தன்னுடைய கேரியரின் கடைசி போட்டி தமிழக மண்ணில் தான் நடைபெறும் என்று அறிவித்து 2023 ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் விளையாட காத்திருக்கிறார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 224 ரன்கள் குவித்தது போன்ற நிறைய சாதனைகளை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி நிகழ்த்தியுள்ளார். எனவே சந்தேகமின்றி விரைவில் சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் தோனியின் பெயரில் ஒரு பகுதியை பார்க்கலாம்.

2. வான்கடே மைதானம்: என்ன தான் சச்சின் பிறந்து வளர்ந்து விளையாடியிருந்தாலும் மும்பை வான்கடே மைதானம் தோனியால் தான் உலகப் புகழ் பெற்றது என்று சொல்லலாம். ஏனெனில் 2011 உலகக் கோப்பை பைனலில் முக்கிய நேரத்தில் களமிறங்கி முக்கிய நேரத்தில் பார்முக்கு திரும்பி 91* ரன்கள் விளாசி வெற்றி பெற வைத்த அவர் சிக்ஸருடன் இந்தியாவின் 28 வருட உலகக் கோப்பை தாகத்தை தணித்தது எப்போதும் மறக்க முடியாது.

- Advertisement -

குறிப்பாக ரவி சாஸ்திரி வர்ணனையுடன் அவர் அடித்த சிக்சரை இப்போது நினைத்தாலும் ஒவ்வொரு இந்திய ரசிகனுக்கும் புல்லரிக்கும். சொல்லப்போனால் அந்த சிக்சர் விழுந்த சீட்டை ஏற்கனவே தோனியை கௌரவிக்கும் வகையில் அவருக்காக வான்கடே மைதானம் ஒதுக்கியுள்ளது. எனவே வருங்காலங்களில் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது வரிசையில் வான்கடே மைதானத்தில் தோனியின் பெயருடன் ஒரு பகுதியை பார்க்க அதிக வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: உங்களோட இடத்தை சூர்யகுமார் யாதவ் பறிச்சுட்டாருனு தெரியுமா? செய்தியாளர் கேள்விக்கு சர்பராஸ் கான் பதில்

3. எம்சிஏ மைதானம்: புனேவில் இருக்கும் எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 2016 ஐபிஎல் தொடரில் ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ஸ் அணிக்காக கேப்டனாக தோனி செயல்பட்டார். மேலும் அந்த மைதானத்தை சொந்த மைதானமாக வைத்து 2018 ஐபிஎல் தொடரில் விளையாடிய தோனி தலைமையிலான சென்னை இறுதியில் சாம்பியன் பட்டமும் வென்றது. எனவே அந்த மைதானத்திலும் வருங்காலங்களில் தோனியின் பெயர் ஒரு பகுதிக்கு சூட்டப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

Advertisement