உங்களோட இடத்தை சூர்யகுமார் யாதவ் பறிச்சுட்டாருனு தெரியுமா? செய்தியாளர் கேள்விக்கு சர்பராஸ் கான் பதில்

Suryakumar yadav sarfaraz khan
- Advertisement -

வரும் பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் பங்கேற்க ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற இத்தொடரில் குறைந்தது 3 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கும் இந்திய அணியில் இளம் வீரர் சர்பராஸ் கான் தேர்வு செய்யப்படாதது ஏராளமான ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது. ஏனெனில் உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பையில் கடந்த 3 வருடங்களாக 800, 900 போன்ற பெரிய ரன்களை விளாசி வரும் அவர் சதங்களையும் இரட்டை சதங்களையும் அடித்து தொடர்ந்து தேர்வுக்குழுவின் கதவை தட்டி வருகிறார்.

sarfaraz 2

- Advertisement -

அதனால் கடந்த வருட ரஞ்சிக்கோப்பை பைனலில் சதமடித்த போது கடந்த டிசம்பர் மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்படுவீர்கள் என்று தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா தெரிவித்தும் அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரில் கூட தன்னை தேர்வு செய்யவில்லை என்று சர்ஃபராஸ் கான் சமீபத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். சொல்லப்போனால் இந்திய டெஸ்ட் அணிக்கு உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பையில் அசத்தும் அவரை தேர்வு செய்வதே நியாயமாகும்.

சூரியகுமாருக்கு சென்ற இடம்:
ஆனால் அதை செய்யாத தேர்வுக்குழு வெள்ளை பந்து கிரிக்கெட்டில் உச்சகட்ட பார்மில் அற்புதமாக செயல்படுகிறார் என்பதற்காக சூரியகுமார் யாதவை சம்பந்தமின்றி டெஸ்ட் அணியில் முதல் முறையாக தேர்வு செய்துள்ளது. மேலும் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவான் டான் பிராட்மேனனுக்கு பின் 80க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியை சர்பாரஸ் கான் கொண்டுள்ள நிலையில் வெறும் 45+ பேட்டிங் சராசரியை கொண்டுள்ள சூரியகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளது ரஞ்சி கோப்பைக்கு நிகழ்த்தப்பட்ட அவமானம் என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Suryakumar Yadav.jpeg

மொத்தத்தில் அஜிங்கிய ரஹானே கழற்றி விடப்பட்டதால் சர்பராஸ் கானுக்கு கிடைக்க வேண்டிய நம்பர் 5 இடம் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுகிறார் என்பதற்காக சூரியகுமாருக்கு கிடைத்துள்ளது என்பதே நிதர்சனமாகும். இந்நிலையில் சூரியகுமார் யாதவ் உங்களது இடத்தை பறித்து விட்டாரா என்ற கேள்விக்கு மும்பைக்காக ஒரே அணியில் தம்முடன் விளையாடி நண்பனாக விளங்கும் அவர் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட்டதில் தமக்கு மகிழ்ச்சியே என்று சர்பராஸ் கான் தெரிவித்துள்ளார். இது பற்றி பிரபல இந்திய பத்திரிக்கையாளர் விமல் குமார் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்து பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவரது தேர்வு எனக்கு உத்வேகத்தை கொடுக்கிறது. சூரியகுமார் யாதவ் என்னுடைய நல்ல நண்பர். மும்பை அணிக்காக விளையாடும் போது நாங்கள் நிறைய நல்ல நேரங்களை செலவிட்டுள்ளோம். அந்த சமயங்களில் நான் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். சொல்லப்போனால் அவர் இந்த வாய்ப்புக்காக நீண்ட காலங்கள் காத்திருந்தார். ஆனால் தற்போது அவர் விளையாடும் விதமும் ரஞ்சிக் கோப்பை மற்றும் டி20 கிரிக்கெட்டில் இதுவரை பெற்றுள்ள அனுபவமும் சேர்ந்து தான் அவருக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அது அவருக்கு இந்திய அணியில் எளிதான வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது”

Sarfaraz khan 1

“எனவே அதற்காக நான் கவலைப்படாமல் ரஞ்சிக் கோப்பை, சயீத் முஷ்டாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை என எந்த தொடராக இருந்தாலும் ஒவ்வொரு போட்டிக்கு முன்பாக பெரிய ரன்களை குவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் களமிறங்குகிறேன். அதை மட்டுமே என்னாலும் கட்டுப்படுத்த முடியும். இந்தியாவுக்காக தேர்வு செய்வது பற்றி என்னால் எதையும் கட்டுப்படுத்த முடியாது” என்று கூறினார்.

இதையும் படிங்க: வெறும் 30 பால் போட்டா எப்டி? பும்ரா உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் அடிக்கடி காயமடைவதற்கான காரணத்தை உடைக்கும் கபில் தேவ்

அவர் கூறுவது போல அவரைப் போலவே கடந்த பல வருடங்களாக உள்ளூர் தொடரில் போராடி வந்த சூரியகுமார் 30 வயதில் தான் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். அதை கொஞ்சமும் வீணடிக்காமல் டி20 கிரிக்கெட்டில் அசத்திய காரணத்தாலும் கடின உழைப்பின் பயனாகவும் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement