IPL 2023 : இந்த சீசனில் தல எம்எஸ் தோனி படைக்க வாய்ப்புள்ள 3 சிறப்பான சாதனைகளின் பட்டியல்

Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கோடைகாலத்தில் மகிழ்விப்பதற்காக வரும் இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் மார்ச் 31 முதல் நடைபெறுகிறது. அகமதாபாத் நகரில் துவங்கும் இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. அந்த அணிக்கு 4 கோப்பைகளை வென்று கொடுத்து 2வது வெற்றிகரமான கேப்டனாக திகழும் எம்எஸ் தோனி 41 வயதை கடந்து விட்டதால் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தன்னை தல என்று கொண்டாடும் தமிழக ரசிகர்கள் மீது வைத்திருக்கும் பாசத்தால் தன்னுடைய கேரியரின் கடைசி போட்டி சென்னை மண்ணில் நடைபெறும் என்று ஏற்கனவே அவர் அறிவித்துள்ளார்.

Hardik Pandya MS DHoni GT vs CSK

- Advertisement -

அந்த நிலையில் 2019க்குப்பின் முதல் முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் இந்த வருட ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் அவர் ஓய்வு பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே அவரது ஆட்டத்தை பார்ப்பதற்காக அனைத்து ரசிகர்களும் அவருடன் காத்திருக்கும் நிலையில் கடந்த 15 வருடங்களாக நிறைய சாதனைகளை படைத்து ஜாம்பவானாக திகழும் எம்எஸ் தோனி இந்த ஐபிஎல் தொடரில் படைக்க வாய்ப்புள்ள சில சிறப்பான சாதனைகளைப் பற்றி பார்ப்போம்:

1. சிக்ஸர் கிங்: தோனியிடம் இருக்கும் பன்முகத் திறமைகளில் அதிரடியாக சிக்ஸர்களை அடிக்கும் ஸ்டைலுக்கு மயங்காத ரசிகர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம். குறிப்பாக ஹெலிகாப்டர் ஷாட்களை அடிப்பதில் வல்லவரான அவர் கடைசி நேரங்களில் அதிரடியாக விளையாடி மிகச் சிறந்த பினிஷராக செயல்பட்டு இதுவரை 206 இன்னிங்ஸில் 229 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

MS Dhoni 16

எனவே இந்த தொடரில் இன்னும் 21 சிக்சர்கள் அடிக்கும் பட்சத்தில் ஐபிஎல் கிரிக்கெட்டில் 250 சிக்சர்கள் அடிக்கும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார். அவரை போலவே ஏற்கனவே 240 சிக்ஸர்கள் அடித்து இந்த சாதனை பட்டியலில் அவருக்கு முன்பாக இருக்கும் ரோகித் சர்மாவும் அந்த சாதனையை படைக்க அதிக வாய்ப்புள்ளது. சமீப காலங்களில் தடுமாறினாலும் இந்த வருடம் இளம் வீரரை போல் கட்டு மஸ்தான உடம்புடன் கடுமையாக பயிற்சிகளை செய்து வரும் தோனி தமிழக ரசிகர்களின் ஆதரவுடன் சேப்பாக்கம் மைதானத்தில் அதிரடியாக சிக்ஸர்களை பறக்க விட்டு இந்த சாதனையை படைப்பார் என்று நம்பலாம்.

- Advertisement -

2. 250 போட்டிகள்: கடந்த 2008 முதல் பெரும்பாலும் சென்னை அணிக்காகவும் 2 சீசன்களில் புனே அணிக்காகவும் விளையாடிய தோனி இதுவரை 234 போட்டிகளில் விளையாடி ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை ஏற்கனவே படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 229 போட்டிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறார்.

MS Dhoni 2022 IPL

அந்த நிலையில் இந்த வருடம் மேற்கொண்டு 16 போட்டிகளில் விளையாடும் பட்சத்தில் ஐபிஎல் வரலாற்றில் 250 போட்டிகளில் விளையாடும் முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை எம்எஸ் தோனி படைப்பார். லீக் சுற்றிலேயே 14 போட்டிகளில் விளையாடுவார் என்ற நிலையில் அதில் சென்னை அசத்தலாக செயல்பட்டு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றாலே இந்த சாதனையை அவர் எளிதாக படைக்க வாய்ப்புள்ளது.

- Advertisement -

3. 5000 ரன்கள்: ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை 206 இன்னிங்ஸில் 4978* ரன்களை எடுத்துள்ள தோனி அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பராகவும் ஒட்டுமொத்த பட்டியலில் 6வது வீரராகவும் சாதனை படைத்துள்ளார். குறிப்பாக பொதுவாகவே மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய அவர் இந்த ரன்களை விராட் கோலி (36.19) ஷிகர் தவான் (35.07) ரோகித் சர்மா (30.30) சுரேஷ் ரெய்னா (32.51) போன்ற டாப் ஆர்டர் இந்திய பேட்ஸ்மேன்களை விட அதிக சராசரியில் (39.19) குவித்துள்ளதே பெரிய சாதனையாகும்.

Dhoni 1

இதையும் படிங்க:IPL 2023 : அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? மும்பை கோச் – அளித்த நேரடி பதில் இதோ

அப்படிப்பட்ட நிலையில் இந்த வருடம் இன்னும் அவர் 22 ரன்களை அடிக்கும் பட்சத்தில் ஐபிஎல் கிரிக்கெட்டில் 5000 ரன்கள் அடித்த முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் 5வது இந்திய வீரர் என்ற அற்புதமான வரலாற்று சாதனையை படைப்பார். இந்த சாதனையை நிச்சயமாக அவர் படைப்பார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

Advertisement