IPL 2023 : அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? மும்பை கோச் – அளித்த நேரடி பதில் இதோ

Mark-Boucher
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இந்த ஆண்டு ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 16-வது சீசனை மார்ச் 31-ஆம் தேதி நாளை துவங்க உள்ளது. இந்த ஆண்டிற்கான முதலாவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

IPL-2023

- Advertisement -

இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளும் தயாராகி வரும் வேளையில் ஒரு சில அணிகளில் காயம் காரணமாக வீரர்கள் வெளியேறியுள்ளது அந்த அணிகளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதோடு இளம் வீரர்கள் பலருக்கு இந்த தொடரில் இடம் கிடைக்குமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிலும் குறிப்பாக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இரண்டு ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று வந்தாலும் அவருக்கு இதுவரை ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே இந்த ஆண்டு அவர் அறிமுகப் போட்டியில் விளையாடுவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

arjun tendulkar

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமாக வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மும்பை அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறுகையில் தனது நேரடியான பதிலை அளித்தார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது மீண்டும் சிறப்பாக பயிற்சி செய்து அணியில் இணைந்துள்ளார். அது மட்டுமின்றி அவரது பயிற்சி செயல்பாடுகளை நாங்கள் கவனித்து வருகிறோம். உள்ளூர் கிரிக்கெட்டில் கடந்த ஆறு மாதமாக அவர் மிகச் சிறப்பாக பந்து வீசி வருவதாகவே நாங்கள் நினைக்கிறோம்.

இதையும் படிங்க : என்னது? அப்போ இவர் கேப்டன் இல்லையா? ஐ.பி.எல் நிர்வாகம் வெளியிட்ட புகைப்படத்தால் – ரசிகர்கள் ஏமாற்றம்

எனவே முழு உடற்தகுதியுடன் இருந்து பயிற்சியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார் அவரது பெயரை பிளேயிங் லெவனில் இணைக்க பரிசளிப்போம் என மார்க் பவுச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement