என்னது? அப்போ இவர் கேப்டன் இல்லையா? ஐ.பி.எல் நிர்வாகம் வெளியிட்ட புகைப்படத்தால் – ரசிகர்கள் ஏமாற்றம்

IPL-2023
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு அறிமுகமான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஆண்டுதோறும் ஐபிஎல் தொடருக்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே உலக அளவில் அதிகமாக பார்க்கப்படும் ஒரு பிரம்மாண்ட தொடராக உருவெடுத்திருக்கும் ஐபிஎல் தொடரானது இந்த ஆண்டு 16-வது சீசனை அடியெடுத்து வைக்க உள்ளது. அந்த வகையில் நடப்பு ஐபிஎல் தொடரின் 2023-வது ஆண்டிற்கான போட்டிகள் வரும் மார்ச் 31 நாளை முதல் நடைபெற உள்ளது.

இந்த தொடரின் முதலாவது போட்டியாக நாளை மார்ச் 31-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முதல் போட்டியில் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆண்டு சீசனுக்கு முன்னதாக ஐபிஎல் மினி ஏலம் நடத்தப்பட்டு தற்போது அனைத்து அணிகளும் இந்த தொடரில் பங்கேற்க தயாராக இருக்கும் வேளையில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் கோப்பையானது தற்போது ரசிகர்களுக்காக வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து அணிகளை சேர்ந்த கேப்டன்களும் ஒன்றாக புகைப்படத்தையும் நரேந்திர மோடி மைதானத்தில் எடுத்துக் கொண்டனர்.

இந்த புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் ஒரு சிலர் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதற்கு காரணம் யாதெனில் : இந்த புகைப்படத்தில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மட்டும் இல்லாதது மும்பை அணி ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் ஒன்பது அணிகளின் கேப்டன்களும் இந்த புகைப்படத்தில் இருக்கும் வேளையில் ரோகித் சர்மா மட்டும் இந்த புகைப்படத்தில் இல்லை. அதேபோன்று சன்ரைசர்ஸ் கேப்டன் மார்க்ரம் இன்னும் சன்ரைசர்ஸ் அணியுடன் இணையாமல் இருப்பதினால் அவருக்கு பதிலாக புவனேஸ்வர் குமார் கோப்பை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க : தன்னுடைய 10ஆம் வகுப்பு பள்ளி மார்க் ஷீட்டை வெளியிட்ட விராட் கோலி – எவ்ளோ மார்க் எடுத்துருக்காரு பாருங்க

அதனை தவிர்த்து இந்த கோப்பை அறிமுக விழாவில் பரோகித் மட்டும் கலந்து கொள்ளாததால் அவர் கேப்டன் இல்லையா? என்பது போன்ற கேள்விகளை எழுப்பி இந்த கேள்வியை ரசிகர்கள் வைரலாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement