தன்னுடைய 10ஆம் வகுப்பு பள்ளி மார்க் ஷீட்டை வெளியிட்ட விராட் கோலி – எவ்ளோ மார்க் எடுத்துருக்காரு பாருங்க

Virat Kohli Mark Sheet
- Advertisement -

டெல்லியை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 2008ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்து சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆரம்ப காலங்களில் இதர வீரர்களைப் போலவே தடுமாறினாலும் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனியின் ஆதரவுடன் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த அவர் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற கடந்த 2013க்குப்பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் உலகின் அனைத்து இடங்களிலும் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 25000+ ரன்களையும் 75 சதங்களையும் விளாசி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

மேலும் கேப்டனாக 2014 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் 2017 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவை வழி நடத்திய அவர் உலகக் கோப்பையை வென்று கொடுக்கா விட்டாலும் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் வரலாறு காணாத வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் முதல் முறையாக வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் தோனி, கங்குலி ஆகியோரை மிஞ்சி ஆசிய அளவில் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

மார்க் ஷீட்:
பொதுவாக அவரை போன்ற நட்சத்திர வீரர்கள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக ஆரம்ப காலங்களில் பள்ளிகளில் சுமாராகவே படித்திருப்பார்கள். அந்த வகையில் கடந்த 2004ஆம் ஆண்டு டெல்லி மாநில கல்வி ஆணையத்தின் சார்பாக தமது ஊரில் இருந்த சேவியர் கான்வெர்ன்ட் பள்ளியில் 10வது படித்து பொதுத்தேர்வில் வாங்கிய மதிப்பெண் சான்றிதழை விராட் கோலி சமூக வலைதள பக்கத்தில் ஜாலியாக பகிர்ந்துள்ளார். அதில் கிட்டத்தட்ட பெரும்பாலானவர்கள் பலவீனமாக இருக்கும் கணக்கு பாடத்தில் இருப்பதிலேயே மிகவும் குறைவாக 51 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துள்ள அவர் அறிவியல் படத்தில் 55 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

அதே போல் அதிகபட்சமாக ஆங்கிலத்தில் 83 மதிப்பெண்களும் சமூக அறிவியலில் 81 மதிப்பெண்களும் ஐடி பாடத்தில் 74 மதிப்பெண்களும் எடுத்துள்ள அவர் தனது தாய் மொழியான இந்தியில் 75 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மொத்தமாக 6 பாடங்களில் 419 என்ற நல்ல மதிப்பெண்களை எடுத்து தேர்வாவான அவர் இந்த மதிப்பெண் சான்றிதழை சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறிப்பாக “உங்களது மதிப்பெண் சான்றிதழில் மிகவும் குறைவாக உள்ளவை உங்களது கேரக்டரை பற்றி அதிகமாக பேசுவது வேடிக்கையானது” என்ற தலைப்புடன் இதை பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

தற்போது அவருடைய மார்க் ஷீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பெரிய அளவில் படிக்கவில்லை என்றாலும் 10வது ஆங்கில பாடத்தில் இடம் பெற்று பல 90ஸ் கிட்ஸ் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். அதே போல சமீபத்தில் 9ஆம் வகுப்பு தேர்வில் விராட் கோலி பற்றி புகைப்படத்துடன் வினாத்தாளில் கேள்வி இருந்தது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது.

அந்த வகையில் பள்ளியளவில் ஓரளவு சிறப்பாக படித்து நல்ல மதிப்பெண்களை எடுத்திருந்தாலும் தற்போது வருங்கால சந்ததியினர் தம்மைப் பற்றி படித்து பெரிய அளவில் முன்னேறும் அளவுக்கு உயர்ந்துள்ளதே விராட் கோலியின் மிகப்பெரிய சாதனை என்று சொல்லலாம். அந்த வகையில் பலருக்கும் ரோல் மாடலாக திகழும் அவர் அடுத்ததாக 2023 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட தயாராகி வருகிறார்.

இதையும் படிங்க: IPL 2023 : ருதுராஜ் கூட பரவால்ல, உ.கோ சான்ஸ் கிடைக்க நீங்க ஐபிஎல் தொடரில் கண்டிப்பா அடிக்கணும் – இளம் வீரரை எச்சரித்த சேவாக்

கடந்த வருடம் சுமாராக செயல்பட்ட அவர் 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்ததால் சந்தித்த விமர்சனங்களை சமீபத்தில் உடைத்து 3 வகையான கிரிக்கெட்டிலும் சதங்களை விளாசி நல்ல ஃபார்முக்கு திரும்பியுள்ளார். எனவே இந்த வருடம் சாதாரண வீரராக அழுத்தமின்றி மிகச் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி பெங்களூரு முதல் கோப்பையை வெல்வதற்கு உதவி செய்வாரா என்பதே விராட் கோலி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Advertisement